சென்னை அண்ணாசாலையில் சமூக விரோதிகள் அட்டகாசம் கைகட்டி வேடிக்கை பார்த்த *காவல்துறை

சென்னை அண்ணாசாலையில் சமூக விரோதிகள் அட்டகாசம் கைகட்டி வேடிக்கை பார்த்த *காவல்துறை

எப்போதுமே மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சென்னை அண்ணா சாலையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் பிரதான இடத்தில் அமைந்துள்ள பிரியதர்ஷினி ஹோட்டலில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் 15 – 16 வயதுடைய ஆண், பெண்குழந்தைகள் போதையில் அடிக்கும் கும்மாளத்தால், அண்ணா சாலையின் அருகில் அமைந்துள்ள எல்லீஸ் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஆகியவற்றில் வசிக்கக்கூடிய மக்கள்  மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக புகார் அளித்தாலும் கூட காவல்துறை இதையெல்லாம் கண்டுகொ ள்ளாமல் கை கட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

இன்ற. பிற்பகல் அங்கு  நடைபெற்ற சமுக விரோத கும்பல் அட்டகாசம்  செய்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது, கும்மாளத்தில் ஈடுபட்ட கும்பல் கேமிராவை உடைத்து விடுவேன் என்றும், பத்திரிகையாளர்களை தாக்க முயன்ற சம்ப வம் ஊடகத்துறையினரிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவத்திற்கு மூலகாரணமான பிரியதர்ஷிணி ஹோட்டலுக்கு பார் லைசன்ஸ் மார்ச் மாதமே காலவாதியாகி  ஆகிய நிலையில், கடந்த ஒரு வாரமாக அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதோடு பல்வேறு சமூக விரோத செயல்களும் இந்த ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பாரில் மதுபானம் விற்பனை செய் ய வேண்டுமென அரசு உத்தரவிருந்தாலும், அரசு விதியை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினரின் ஆதரவோடு இளம் சிறார்கள் சீரழிக்கும் வேலையை கச்சிதமாக பிரயதர்ஷிணி ஹோட்டல் செய்து வருகிறது.

பிரியதர்ஷிணி ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஆதரவாக எஸ்.ஐ., மருது உட்பட சில காவல் துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில்,  காவல்ஆணையரின் வீடும் அதே பகுதியில் அமைந் துள்ள தான் வேடிக்கையின் உச்சகட்டம்.

அரசுக்கு, காவல் துறைக்கும் பெரும் அவப்பெயரை ஏற்ப்படுத்துகின்றன இது போன்ற சம்பவங்கள்.