நடிகர் கிஷோருடன் ரோப் இல்லாமல், டூப் இல்லாமல் மோதிய குங்ஃபூ மாஸ்டர் ராஜநா ய கம்!
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் “மஞ்சக்குருவி” படத்தி ற் காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்பொழுது, ரோப் இ ல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒ ரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்ச ரிய த் தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசா ரி க்கும் போதுதான், அந் த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மா ஸ்டர் என்பதும், இதுவரை பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட கு ங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரிய வந்த து. உ டனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கி ஷோர்.
கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் பட த்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மா ஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.
வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவ னிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். சௌந்தர்யன் இசையமை த்திருக்கும் “மஞ்சக்குருவி” படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சி ன் னதம்பி இயக்கியுள்ளார்.