திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன்னதான திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்.
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன் னதான திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருத்தணி, திருச்செந்தூரில் உள்ள முரு கன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயில்களில், பக்தர்களின் பசியைப் போக்க 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக நடைபெற்ற தொடக்க விழாவில் முதலமைச்சருடன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மட்டும் 40 பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணி யில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச் சுறு த்தல் என்பதால் உணவு சாப்பிட வரும் பக்தர்கள் அனைவரும் சமூக இடை வெ ளியு டன் அமர வைத்து உணவு பரிமாறப்படுகிறது. அன்னதான திட்டத்தின் முதல் நாளான இன்று, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், ஜாங்கிரி, வடை, பாயசம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.