தனிஷ்க்கின் மாபெரும் ‘வைரங்களின் திருவிழா’
சென்னை, இந்தியாவின் மிகப்பெரும் நகை ப்ராண்ட் ஆக முன்னணி வகிக்கும் டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் பளீச்சிடும் வைரங்களின் திருவிழாவுடன் [Festival of Diamonds], நம் வாழ்வின் ஒவ்வொரு சிறு தருணங்களையும் கொண்டாட மனப்பூர்வமாக அழைக்கிறது. நம் வாழ்வின் முக்கியமான தருணங்களுக்காக, கொண்டாட தூண்டும் சாதனைகளாக காத்திருப்பதை தகர்த்தெறிந்து, காலம் கடந்தும் அழியாத கவர்ச்சியில் ஜொலிக்கும் மாயஜால வைரங்களுடன் வாழ்க்கையைக் கொண்டாட தனிஷ்க் வரவேற்கிறது.
இந்த மாபெரும் ’வைரங்களின் திருவிழா’, பல்வேறு வகைகள், பிரிவுகளிலான வைர நகைகளை தனிஷ்க் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவை உங்களுடைய ஆபரணங்களின் பெட்டகத்திற்கு பெருமை சேர்க்கும் மற்றொரு மிகச்சிறப்பான ஆபரணமாக அமையும். இந்த கொண்டாட்டம் ஒரு சாதாரணமான கொண்டாட்டமாக அல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகத்துடன், உத்வேகத்துடனும் கொண்டாட தூண்டுகிற வகையில் இந்த ஜொலி ஜொலிக்கும் வைர ஆபரணங்களின் சங்கமமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நம் வாழ்க்கையில் கொண்டாடுவதற்கு தகுதியான, சில சின்னச்சின்ன வெற்றிகள் கண்டுக்கொள்ளாமல் போகப்படலாம், பரபரப்பான வாழ்க்கையின் வேகத்தில் அவை கவனிக்கப்படாமலேயே போகலாம். ஆனால் தனிஷ்க், அத்தகைய தருணங்களை, வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளைக் கொண்டாட அழைக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவகையில் பல அம்சங்களுடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வைர ஆபரணங்களில் காதணிகள், ப்ரேஸ்லெட்கள், கழுத்தில் அணியும் நகைகள், விரலில் அணியும் மோதிரங்கள் உள்பட இன்னும் பல பிரிவிலான ஆபரணங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன. இந்த மாபெரும் வைரங்களின் திருவிழாவானது, நம்முடைய உற்சாகமளிக்கும் தருணங்கள், பிறந்த நாட்கள், சின்னச்சின்ன சாதனைகள், முக்கிய தருணங்கள் என எல்லாவற்றுக்கும் ஏற்ற தனித்துவமிக்க, பல்வேறு பிரிவுகளிலான ஆபரணங்களில் இருந்து தேர்ந்தெடுக்க முடிகிற மகிழ்ச்சியை அளிக்கிறது. உற்சாகமளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தனிஷ்க்கின் இந்த வைர ஆபரணங்கள் வெறும் 15,000 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த வைரங்களின் திருவிழாவிற்கு கூடுதல் கவர்ச்சியை அளிக்கும் வகையில், பிரத்தியேகமான தள்ளுபடி சலுகையையும் தனிஷ்க் வழங்குகிறது. அதாவது வைர நகைகளின் மதிப்பில் 20% வரை தள்ளுபடியை அளிக்கிறது தனிஷ்க். இச்சலுகையோடு, வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகைகளாக வாங்கும் போது 100%* தற்போதைய மதிப்பில் பிரமிக்க வைக்கும் புதிய வைர நகைகளாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த அருமையான வாய்ப்பு நவநாகரீகமான புதிய ஆபரணங்களை வாங்குதற்கு தனித்துவமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சின்னச்சின்ன தருணங்களுடன் கூட வைரத்துடன் கொண்டாட ஏற்றவை என்பதை தனிஷ்க் உறுதியாக நம்புகிறது. தனிஷ்கின் வைர ஆபரணப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான வைர ஆபரணங்கள் ஒவ்வொன்றும் தனிஷ்க்கின் நம்பிக்கை மற்றும் உத்திரவாதத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை வைர நகை ப்ரியர்களுக்கு மிகச்சிறந்த வைர நகைகளை, இதுவரையில்லாத விதவிதமான வடிவமைப்புகளுடன், உயர்தர வைரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்கள், உங்களுடைய ரசனைக்கு ஏற்ற அழகியலுடன் தனிஷ்க்கினால் வழங்கப்படுகின்றன. நேர்த்தியுடன் ரசனையையும் கலந்து வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள், உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு தனித்துவமான பயணத்தையும் குறிக்கும் ஒரு ஜொலிஜொலிக்கும் சின்னமாக அமைந்திருக்கின்றன. உங்களது வாழ்க்கையின் மிகப்பிரம்மாண்டமான கதையை, ஜொலிஜொலிக்கும் வைரத்தின் அழகியலோடு கொண்டாடுங்கள். அதற்கு இதுவே மிகச்சரியான தருணம்.
உங்கள் அருகிலுள்ள தனிஷ்க் விற்பனை நிலையத்துக்கு இன்றே செல்லுங்கள். இந்த அற்புதமான ‘வைரங்களின் திருவிழா’வில் மனம் திளைத்து கொண்டாடுங்கள். அல்லது அதிகாரப்பூர்வமான இணையதளமான https://www.tanishq.co.in/festival-of-diamond -ல் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஷாப்பிங் செய்து மகிழுங்கள்.
*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது [T&C Apply]
தனிஷ்க் குறித்து:
தனிஷ்க் இந்தியாவில் மிக அதிகம் நேசிக்கப்படும் நகை பிராண்ட் ஆக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது பெரும் பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். நுணுக்கமான கைவினைத்திறன், பிரத்தியேகமான வடிவமைப்பு, உயர்தர மற்றும் உத்தரவாதமிக்க தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களிடையே நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது தனிஷ்க். இந்தியப் பெண்களின் நகைத் தேவைகளை மற்றும் எதிர்பார்புகளைக் கருத்தில் கொண்டு நகைத்தொகுப்புகளை வழங்குகிறது. மேலும் இந்தியப் பெண்களின் ரசனை, விருப்பங்களுக்கு ஏற்றார் போல் பாரம்பரிய மற்றும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஒரே நகை நிறுவனம் தனிஷ்க் ஆகும். நகைத் தயாரிப்பில் மிக நுணுக்கமான நிபுணத்துவம் மற்றும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதை பாராட்டி த ட்ரஸ்ட் ரிசர்ச் அட்வைசரியின் ‘The Most Trusted Jewelry Brand in India‘ ஆக தனிஷ்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மிகத் தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் உள்ளன. அவற்றில் வாடிக்கையாளர்கள் திறம்பட நகைகளின் தூய்மைத் தன்மை குறித்து பரிசோதித்து அறிந்து கொள்ளலாம். தனிஷ்க் தங்கம், வைரம், ப்ளாட்டினர் நகைத்தொகுப்புகளை, 5,000-க்கும் அதிகமான வடிவமைப்புகளில் நம்முடைய பாரம்பரியம், மேற்கத்திய ரசனையுடன் கலந்த ப்ரத்தியேக நகைத்தொகுப்புகளை வழங்குகிறது. தற்போது 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் 460-க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன.