சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி உலகளாவிய பிளாக்பஸ்டர்

சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி உலகளாவிய பிளாக்பஸ்டர்

சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி உலகளாவிய பிளாக்பஸ்டர் – ஷார்க் டேங்கை நிகழ்ச்சியை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது

  • 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல சிறு தொழில் முனைவோர்களை மீண்டும் புத்துயிர் பெற காரணமாயிருந்த உலகின் நம்பர் 1 பிசினஸ் ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் அதன் முதல் சீசனுக்கு தயாராகுகிறது
  • ஷார்க் டேங்க் இந்தியாவில் பதிவுசெய்து பங்கேற்க, சோனிலிவ் வலைத்தளத்திற்கு செல்லவும் அல்லது பதிவிறக்கம் செய்யவும்

சென்னை, 6 ஜூலை, 2021: ஒப்பந்தம் செய்ய சுறாக்கள் நம் ஊருக்கு வருகிறார்கள், தயா ராக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய நல்ல வணிக திட்டத்தை அவ ர்கள் முன் வைக்கவேண்டியது தான். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் உலகளவில் வெற் றிக ரமாக ஓடிய வணிக ரியாலிட்டி நிகழ்ச்சியான ஷார்க் டேங்கின் இந்தியாவிற்கான உரி மை யை பெற்றுள்ளது. இது சோனி எண்டெர்டைன்மெண்ட் தொலைக்காட்சியில் ஒளி பர ப்பப்படும். 180 நிகழ்ச்சித்தொடர்களுடன், உலகளவில் 30க்கும் மேற்பட்ட விருதுகளை வா ங்கிய இந்நிகழ்ச்சி 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 40 க்கும் மேற்பட்ட நா டுகளில் பல சிறு தொழில் முனைவோர்களை மீண்டும் புத்துயிர் பெற காரணமாயிருந்த உலகின் நம்பர் 1 பிசினஸ் ரியாலிட்டி ஷோ ஆகும். உலைகளில் மிகவும் வேகமாக வளர் ந்து வரும் மற்றும் மூன்றாவது மிகப்பெரிய தொழில் முனைவோருக்கான இடமாக விள ங்கும் இந்தியாவில் இந்நிகழ்ச்சியை ஸ்டுடியோநெக்ஸ்ட் தயாரிக்க உள்ளது. முதல் சீச னுக்கான இந்நிகழ்ச்சில் பங்கேற்கும் ஆன்லைன் பதிவு வழிகள் சோனிலிவ் செயலியில் மட்டுமே உள்ளது.

புதிய யோசனைகள் மற்றும் உற்சாகத்துடன் இருக்கும் இந்திய தொழில்முனைவோர்கள்  முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் ஆற்றலைக் காட்டி வருகின்றனர். மேலும் அதிகமான இ ந்திய நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்து வருவதால், நாட்டில் புதிய தலை மு றை தொழில் மற்றும் தொழில் முனைவோர் அனைவரையும் ஈர்த்துவருகின்றனர். இந் தியா ஷார்க் டேங்க் போன்ற தனித்துவமான நிகழ்ச்சியை அரங்கேற்ற சிறந்த வர்த்தக சந்தையாகும். சிறந்த வணிக திட்டங்கள், வணிக முன்மாதிரிகள் அல்லது செயலில் உள் ள வணிகங்கள் அனைத்தும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வணிக வல்லு நர்களால் உயிர் பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்கள் தயாரா? உங்கள் வணிக யோசனை, வணிக முன்மாதிரி அல்லது செ யலில் உள்ள வணிகத்தை வெற்றிகரமான செயல் படுத்த இந்த எளிய நான்கு செயல்முறைகளைப் பின் பற்றுங்கள்.

முதல் நிலை – ஆன்லைன் விண்ணப்பம்

சோனிலிவ் செயலியை பதிவிறக்கவும் அல்லது புது ப் பிக்கவும் மேலும் குறிப்பிட ப்பட்டு ள்ள வழிமுறை களைப் பின்பற்றி ஷார்க் டேங்க் இந்தியா பதிவு படி வத்தை பூர்த்தி செய்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வணிக யோ ச னையை குறிப்பிடுங்கள். உங்கள் வணிக யோசனையால் ஷார்க் டேங்க் குழுவை ஈரத் தா ல், நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள்.

இரண்டாம் நிலை – விளக்குரைத்தல்/விளங்கச்செய்தல்:

இந்த நிலையில், ஷார்க் டேங்க் குழு விண்ணப்பதாரர்களையும் அவர்களின் வணிக யோ ச னைகளையும் நன்கு அறிந்து கொள்வார்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் வணிக யோ சனை ஏன் தனித்துவமானது மற்றும் அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று குழுவி டம் சொல்ல விளக்கிக்கூற வேண்டும். இதை ஒரு மூண்டு நிமிட விளக்க ஒளிப்பதிவாக ப திவு செய்து ஷார்க் டேங்க் இந்திய குழுவை ஈர்க்க வேண்டும்

மூன்றாம் நிலை – தணிக்கை

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஷார்க் டேங்க் குழுவுடன் தணிக்கைகளை மே ற்கொள்வார்கள், இது ஷார்க் டேங்க் இந்தியாவின் முதல் பருவத்தில் அதை பெரி யதாக மாற்றுவதற்கான முன் இறுதி நிலையாகும்.

நான்காம் நிலை – ஷார்க் டேங்க்

விடாமுயற்சியின் இறுதி சோதனை இது. இந்த கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண் ண ப்பதாரர்கள் தங்களை ‘சுறாக்கள்’ அல்லது முதலீட்டார்களை நேருக்கு நேர் சந்திப்பர், அவ ர்கள் விண்ணப்பதாரரின் வணிக யோசனையை ஆராய்ந்து, புரிந்து மதிப்பீடு செய்து மு தலீடு செய்வார்கள்.

2001 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஜப்பானில் டைகர்ஸ் ஆஃப் மனி என, நிப்பான் டி.வி உருவாக்கியது, பின்னர் இந்த வடிவம் 2005 ஆம் ஆண்டில் இங் கி லாந்தில் டிராகன் டென் என பெயர் மாற்றி வழங்கப்பட்டது, மேலும் இந்த நிகழ்ச்சி 2009 ஆ ம் ஆண்டில் அமெரிக்காவில் ஷார்க் டேங்க் என திரையிடப்பட்டது. இந்த வடிவத்தை சோ னி பிக்சர்ஸ் தொலைக்காட்சி சர்வதேச அளவில் விநியோகிக்கிறது.

டேனிஷ் கான், வர்த்தகத் தலைவர் – சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி, டிஜிட் டல் பிசினஸ் & ஸ்டுடியோநெக்ஸ்ட் இது பற்றி கூறுகையில் ‘உலகளவில் புகழ்பெற்ற வ ணிக ரியாலிட்டி ஷோ ஷார்க் டேங்கை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் ம கிழ்ச்சியடைகிறோம், இது ஷார்க் டேங்க் இந்தியாவைத் தொடங்க சரியான நேரம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த தொழில்முனைவோர் சூழல் அமைப்பு தோன்றியுள்ளது. புதுமையான வணிக யோசனைகள், சவால்களை எதிர்கொள்ளும் ஆர் வம் மற்றும் நிதி உள்கட்டமைப்பு ஆகியவை உருவாகி வருகின்றன – தொழில் முனை வோ ர் தங்கள் கருத்துக்களை முதலீட்டாளர்களுக்கு (சுறாக்கள்) நேரடியாகக் கா ண்பி ப் பத ற்கான ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் அவர்களை கனவை ஷார்க் டேங்க் இந்தியா ஊக்குவித்து பெரிதாக வளர் உதவுகிறது.’