சொல்லுங்க-டிஆர் கண்ணீர் தமிழர்கள் நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க நீங்க l Silambarasan TR l
இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் ஆல்பம் பாடல் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியானது!
இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந் தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வா ழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மி ன் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெ ளியாகியுள்ளது.
இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது…
இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமை ப் பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன்.
“நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க நீங்க சொல்லுங்க”
என்ற பாடலை பாடியுள்ளேன். இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தயை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலை பாடியுள்ளேன்.
தமிழ் இலக்கியவாதி அஷ்மின், தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதியவர். அவருக்கும் என க்கும் நெடுங்காலமாக நட்பு உள்ளது. அவர் எழுதியுள்ள இந்தப்பாடலை நான் பாட வேண் டும் என்றார். எனவே, இலங்கை மக்கள் படும் பாடு உலகம் முழுக்க தெரிய வே ண்டும் என் றே இந்த பாடலை பாடியுள்ளேன். இலங்கை மக்கள் படும் துயரம் நீங்க வேண்டும். இத னை உங்களிடம் தெரிவிக்கவே உங்களை சந்தித்தேன்.
முல்லிவாய்க்கால கொடுமைக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைக் குமான பதிலடியை ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார். கர்மா எப்போதும் வி டாது. என் தமிழ் மக்களுக்கு, இலங்கை மக்களுக்கு உலகம் உதவ வேண்டும். இந்த பாடலை அனைவரும் பகிர வேண்டும் பரப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
பாடல் தொழில் நுட்ப குழுவினர் விபரம்
இசை – ஜே சமீல் ,பாடலாசிரியர் – கவிஞர் அஷ்மின் ,பாடியவர்கள் – டி ராஜேந்தர், ஜே சமீல், சரோ சமீல் , எடிட்டர் – பி ஜி வி டான் பாஸ்கோ ,ஒளிப்பதிவு – எஸ் சக்திவேல் ,தயாரிப்பு – சாதனை தமிழா (இலங்கை) ,சிறப்பு நன்றி – எம்.வேல் , சஃப்னா தௌஃபிக்