கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அத்துடன் கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக பணியாற்ற தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் ஏராளமான மருத்துவ உதவியாளர்கள், செவிலியர் உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாணவர்களின் கல்வியை அவர்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்து வழங்குவதில் தன்னிகரற்ற நிறுவனமாகத் திகழும் Victory Group of institutions  அதற்கான பயிற்சியையும், பணியிட வாய்ப்பையும் வழங்குகிறது.

இது தொடர்பாக அந்த தனியார் கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது….

” பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களுக்கு எங்கள் நிறுவனம் முன்னணி வணிக நிறுவனங்களின் நிதி ஆதார உதவியுடன் ‘ஸ்வயம் ஹெல்த்'(Swayam Health) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், கொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் சான்றிதழ் மற்றும் பயிற்சியுடனான கல்வியை கற்பிக்கிறது.

இந்த அடிப்படை மருத்துவ வாழ்வாதார கல்வியைப் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய பிறகு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகே உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் நிறுவனங்களில் பணி வாய்ப்பு வழங்கப்படும். குறைந்தபட்சம் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை மாத ஊதியமாக கிடைக்கும் வகையில் இந்த பணி நியமனம் இருக்கும்.

கொரோனாவிற்கு எதிரான போரில் படித்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய சுகாதார துறையும் அழைப்பு விடுத்திருக்கிறது.

பெரு நிறுவனங்கள் சமூக முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யும் நிதி உதவியுடன் கற்பிக்கப்படும் இந்த மருத்துவம் சார்ந்த கல்வியை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனாவிற்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தில் மாணவ தலைமுறையினர் மனமுவந்து கலந்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை நோயற்ற – ஆரோக்கியமான சமூகமாக உருவாக்குவதில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

‘ ஸ்வயம் ஹெல்த்‘ (Swayam Health)திட்டத்தில் முதற்கட்டமாக இணைந்து மருத்துவ வாழ்வாதார கல்வியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் மெஹ்முதா பேகம் (Dr.Mahmooda Begum) மருத்துவ உதவியாளர் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணையையும் வழங்கினார்.

குறிப்பு:

Victory Group of institutions பத்தாவது மற்றும் 12வது படித்த மாணவ மாணவியர்களுக்கு தொழில் கல்வி , கணனி கல்வி, வாழ்வாதார கல்வி உள்ளிட்ட பல கல்விகளில் சான்றிதழும், பயிற்சியும் வழங்கி வருகிறது. தற்போது இணைய வழியில் கல்வி கற்பிக்கப்படுவதுடன் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவ மாணவியர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, அவர்களிடம் மறைந்திருக்கும் மனித வளத்தை இந்த சமூக முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் மடைமாற்றம் செய்து வருகிறோம்.

மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் +91 9962360444 என்ற எண்ணிற்கு அல்லது www.vla.org.in என்ற இணையதள முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.