கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலம் முறைகேடு கண்டித்து ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலம் முறைகேடு கண்டித்து ஒப்பந்ததாரர்கள் போராட்டம்
சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலம் முறைகேடாக நடத்தப்பட்டத்தை கண்டித்து. ஏலத்தில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிக்கும் பணியினை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு கட்டிடம் இடிக்கும் ஒப்பந்த ஏலம் முறைகேடாக நடத் தப்பட்டத்தை கண்டித்து ஏலத்தில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிக்கும் பணியினை நிறுத்தி அநீதி இழைத்த அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கோடிக்கு எடுக்க வேண்டிய ஏலத்தை வெறும் ரூ. 30 இலட்சத்திற்கு எடுத்திருக்கிறார்.இதில் அரசுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியி ருக்கி றார்கள். இதில் சட்டவிரோதமாக கையூட்டு நடந்திருப்பது தெளிவாக தெரிகிற து.பழைய கட்டிடங்களை இடிக்கும் ஒப்பந்ததாரர்கள் 200க்கும் மேற்பட்டோர் இருக்கும் பட்சத்தில் ,13 ஒப்பந்ததாரர்களை மட்டும் ஏலத்தில் இரகசியமாக பங்கு பெற செய்து சட்டத்திற்கு புறப்பாக அரசு அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள்.