ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம்.

‘சூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவ லுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத் தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனை த்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொ ண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:

‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் என த் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில பட ப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்குது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவ ரை பண்ணாத விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொ ம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித் து, சந்தோஷமாக நடித்தது ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில் கிடைத்தது.

‘சேது’ பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப் படி, ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எ னத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள்  என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து  நட்பாகவே இருப் போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய வி ஷயங்கள் பேசுவோம், ஆனால் படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசி யது கிடையாது. ‘இறுதிச்சுற்று’ பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் என தவித்தேன். அப்படி செய்த படம் தான் ‘சூரரைப் போற்று’. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகா ன ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அ னுபவம்.

‘சூரரைப் போற்று’ படம் பெரிய பயணம். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், 44 பக்க கதையாக கொடுத் தார் சுதா கொங்கரா. அப்போதிலிருந்து பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு  ந்தவொரு படத்திலும் கிடைத்தது கிடையாது. இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர் தான் மாற்றி னா கள். அதில் முக்கியமானவர் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதை யா க சொல்லலாம் என எடுத்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை ‘சூரரைப் போற்று’ உருவான விதத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

எனக்கு ஒரு சில விஷயங்களை அழுத்தமாக சொல்வது பிடிக்கும். இதெல்லாம் முந்தைய படத்தில் பண்ணியிருக்க, அப்படி பண்ணாதே என்று சொல்லி சொல்லி படமாக்கினார் சுதா. படமாக திரையில் பார்க்கும் போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தி ல் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கதைக்காக சுதா கொங்கராவின் உழைப்பு பற்றி?

படப்பிடிப்பு இருக்கோ இல்லையோ, 4 மணிக்கு எழுந்துவிடுவார் சுதா கொங்கரா. ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில், 4 – 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார். மற்ற நேரங்களில் இந்தப் படத்துக்குள் என்ன பண்ணலாம், இன்னும் என்ன மெருக்கேற்றலாம் என்பதை மட்டுமே சிந்திப்பார். ஒரு அறையில் உள்ள மனிதர்களில் ஒருவர் ரொம்ப சின்சியராக இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அதை பின்பற்ற தொடங்கு வார்க ள். சில படப்பிடிப்பு தளங்களில் காலை 7 மணிக்கு தான் லைட் எல்லாம் இறக்கி வைப்பார் கள். ஆனால், சுதாவினால் காலை 6:40 மணிக்கு ஷாட் எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்த பட ப்பிடிப்பு தளமும் அதற்கு முன்னால் தயராக இருக்கும். சுதா கொங்கரா அவ்வளவு உழைத் ததால் தான், நாங்களும் அவரைப் பார்த்து உழைக்க முடிந்தது. யாருமே கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.