ஐந்து மொழிகளில் தயாராகும் ‘இக்ஷு’ டீசரை வெளியிட்ட போலீஸ் அதிகாரி ராஜேஸ் வரி!
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந் தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார்.
விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது.
சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்ச லாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார்.
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் ச ங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந் தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை கவிதா தொகுத்து வழங்கினார்.
விழாவில் இசையமைப்பாளர் நவீன் படிஷா பேசும்போது, ‘இந்தப் படத்தின் நாயகன் ராம் நேரில் பார்க்கும்போது சாக்லேட் பாய் லுக்கில் இருக்கிறார். ஆனால் படத்தில் அவரு டை ய நடிப்பு டெரர் ரகமாக உள்ளது. படம் முழுவதும் அவருடைய கடும் உழைப்பை பார்க்க மு டிந்தது. இதில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. பாடலாசிரியர்கள் ஸ்ரீ சிராக், ஷியாம் ஆகியோர் சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி பிரமாதமான வரிகளைக் கொடுத்துள் ளார்கள். பாடல்கள் பேசப்படும் விதத்தில் வந்துள்ளன’ என்றார்.
விழாவில் நாயகன் ராம் கூறியதாவது, இந்த டீமுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், புதுமுகமாகிய என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறு ப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கதைக்கும் கேர க்டருக்கும் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். இந்தப் படம் அ னைத்து தரப்புக்கும் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்றார்.
இயக்குநர் ருஷிகா பேசும்போது, ‘இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தை உண்மை சம்ப வத்தை மையாக வைத்து இயக்கியுள்ளேன். இது பேமிலி கலந்த த்ரில்லர் ஜானர். எனது தா ய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கன வாக இருந்தது. அந்த வகையில் ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்த மாதிரி தமிழ், தெலு ங்கு என்று ஐந்து மொழிகளில் இயக்கியது மகிழ்ச்சி’ என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் விஜய் முரளி கூறியதாவது, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு ப தம் என்பதுபோல் ஐந்து மொழிகளில் வெளியான டீசர் படத்தின் தரத்தின் உறுதி செய் து ள்ளது. பெண் இயக்குநர்கள் வரிசையில் ருஷிகா அறிமுகமாவது மகிழ்ச்சி. ‘இக்ஷு’ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘கண்’ என்றும் ‘சிவன்’ என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றார்க ள். அந்த வகையில் டைட்டில் தனித்துவமாக உள்ளது. சினிமாவுக்கு ஜாதி, மதம் என்கிற பேதம் கிடையாது. எந்த மொழியில் எடுத்தாலும் அது சினிமாதான்.
இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். ச மூகத்துக்கு காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியம். உதராணத்துக்கு ஒரு நாள் நே ரம் காவல் துறை இயங்கவில்லை என்றால் நாட்டில் வன்முறை, கொலை, கொள்ளை என் று சமூக விரோத குற்றங்கள் பெருகிவிடும். அத்தகைய சூழலில் காவல் துறையினர் எப் போதும் முன் களப் பணியாளர்களாக தங்கள் கடமையை சரியாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வீர வணக்கம். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடைய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
விழாவில் நட்டி பேசும்போது, ஹீரோ ராம் முதல் படம் மாதிரி இல்லாமல் வெகு சிறப்பாக பண்ணியிருக்கிறார். இயக்குநர் ருஷிகாவும் திறமையாக இயக்கியுள்ளார். காவல் ஆய் வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மழை சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றியது எல்லோர் ம னதையும் நெகிழ வைத்தது. அதற்கு தலை வணங்குகிறேன். காவல் துறை உங்கள் நண் பன் என்பதற்கு ராஜேஸ்வரி மேடம் சிறந்த உதாரணம். இந்தப் படம் வெற்றியடைய வா ழ்த்துகள்’’ என்றார்.
விழாவில் கலைப்புலி ஜி.சேகரன் பேசியதாவது, ‘நல்லவங்க நாலு பேர் இருந்தால் மழை பெய்யும் என்பார்கள். அந்த வகையில் ராஜேஸ்வரி மாதிரி இருக்கிறவர்கள்தான் மழை பெய்கிறது. அவருடைய தன்னமலற்ற சேவையை பாராட்டும் விதமாக தமிழ்நாடு முதல் வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியது வெகு சிறப்பு. மழைக் கா லத்தில் அரசாங்கம் போர்க் கால அடிப்படையில் சிறப்பாக மக்கள் பணியாற்றியதுகு றி ப்பிடத்தக்கது. அதேபோல் முதல்வர் அவர்களின் தேவை தமிழ் சினிமாவுக்கு தேவை. அவ ர்போல் சுயநலம் பார்க்காத தலைவர் தமிழ் சினிமாவுக்கு தேவை. இப்போது தயாரிப்பா ளர்களை வழி நடத்த எவ்வித முயற்சியும் இல்லை.
சில வருடங்களுக்கு முன் தீபாவளி சமயத்தில் முதல் இரு வாரங்களுக்கு எந்த புதுப் பட மும் வெளியாகது. காரணம், அந்த சமயத்தில் மக்கள் தீபாவளுக்கு துணிமணி வாங்கு வதில் பிஸியாக இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. இந்த தீபாவளிக்கு முன் 11 பட ங்கள் வெளியானது. அதில் பல படங்களின் காட்சிகள் மக்கள் தியேட்டருக்கு வராத கார ணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த புரிதல் இல்லாமல் படங்கள் வெளியா ன ல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதை நெறிமுறைப்படுத்தி தயாரிப்பாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும். அதற்கு நம்முடைய முதல்வர் நல்வழி காண்பிக்க வேண்டும்’’ என்றார்.
விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது, காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியா ற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்று தலுக்குரிய வர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போது ம் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை. சினிமா சமூகத்தில் பல மாற்றங்களு க்கு வழிவகுத்துள்ளது.
பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். காவல் துறையின் சே வை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். கா க்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக் கு ள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனி க்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம்.
எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட் டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மக்கள் சேவையில் இ ருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை பு னிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.
விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது, ‘தமிழ்நாடு எப்போதும் வந்தாரை வாழ வை க்கும் நாடு. இந்த விழாவில் நட்டி, விஜயமுரளி, கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன் போன்ற நல்ல உள்ளங்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. காவல் துறை என்பது நமது தாய். இராணுவம் ந மது தந்தை. அவர்கள் வெயில், மழை என்று பாராமல் கடமை செய்வதால்தான் மக்கள் நி ம்மதியாக இருக்கிறார்கள். காவல் துறையினருக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த பெ ருமை எனக்கு உண்டு. இதில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக உழைத்திரு க்கிறா ர்கள். நம் மொழியை காப்போம். உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பேசுவதை அதிகமா க கற்றுக்கொடுங்கள். தமிழ் வெல்க’ என்றார்.