எஸ். ஆர். எம். கல்வி குழுமத்தின் ஓர் அங்கமாக இயங்கி வரும் எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியானது இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தினால் (ICAR New Delhi) அடுத்த ஐந்தாண்டிற்கு (2024 அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2029)
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியில் இளங்கலை வேளாண்மையும், இளங்கலை தோட்டக்கலையும் பயிற்றுவிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளை கடந்த எந்த வேளாண் கல்லூரியும் இந்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வானது நான்கு வல்லுநர்களால் நடத்தப்பட்டது. எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியின் வகுப்பறை தரம், மாணாக்கர் தங்கும் வசதி, 24 மணி நேர இணைய வசதி, பேராசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தகுதி, வருமான வரி தாக்கல், மாணவர்களின் ஆய்வுக்காக தனி விளைநிலங்கள் முதலிய பலதரப்பட்ட தரக்குறியீடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இவ்வாய்வு முடிவுகளின் அடிப்படையில், எஸ். ஆர். எம். வேளாண் அறிவியல் கல்லூரியானது இந்திய வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தினால் 08.02.2024 முதல் 07.02.2029 வரையிலான ஐந்தாண்டிற்கு அங்கீகரிக்கப்படுவதாகவும் இக்கல்லூரியானது இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரக்குறியீடுகளையும் பூர்த்தி செய்வதாக இருப்பதனால் இம்முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மற்றும் பிறநாட்டு மாணவர்களின் எதிர்காலத்தினை இது மேலும் வலுப்படுத்தும். இக்கல்லூரியில் பயின்று மாணவர்கள் பயன் பெறவும்.