எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராயம் நடத்தும் விருதுகள் வழங்கும் விழா. படைபாளர்களுக்கு விருதுகள் மஹாராஷ்டிர மாநில ஆளுநர் பங்கேற்பு.
இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க உலக தமிழர்கள் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும். எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் பெருமிதம்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலக முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம்.
தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 2.5 கோடி அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 88 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ்பேராயம் விருதுகள் வழங்கும் விழா -2024 நிகழ்ச்சி இன்று காட்டாங்குளதூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பேராயம் தலைவர் முனைவர் கரு. நாகராசன், வரவேற்று பேசினார். மேலும் நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினரக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. இராதாகிருஷ்ணன், கலந்து கொண்டு படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி இராமாபுரம் & திருச்சி வளாகம் இணைத் தலைவர் திரு. சி.நிரஞ்சன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி குழுமத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி குழுமத்தின் துணை வேந்தர் முனைவர் செ. முத்தமிழ்ச் செல்வன் மற்றும் எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம், மற்றும் நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்ப்பேராயம் செயலர் முனைவர் பா.ஜெய்கணேஷ் நன்றி உரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ்ப்பேராயம் விருதுகள் விவரம்
விருதின் பெயர்
நூல் / விருதாளர் பெயர்
1.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
சிலுவ ————— எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
2.
பாரதியார் கவிதை விருது
வானத்தின் கீழே ஒரு வீடு கவிஞர் கடற்கரய்
3.
பாரதியார் கவிதை விருது
தமிழின்றி வாழ்வில்லை —— பாவலர் ப. எழில்வாணன்
4.
அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது
காட்டுக்குள்ளே நூலகம் —— திரு. கீர்த்தி
5.
ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது
From Adhichanallur to Keezhadi
S. Krishnapriya
6.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல்தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது
உயிரற்ற உயிர் —- மருத்துவர் சுதா சேஷய்யன்
7.
முத்துத்தாண்டவர் தமிழிசை விருது
தமிழிசை ——– முனைவர் செ. சுப்புலட்சுமி
8.
பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
முனைவர் வீரபாண்டியன்
9.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது
போக்குவரத்து உருவாக்கமும் சாதிகளின் உருமாற்றமும் முனைவர் கோ. ரகுபதி
10.
சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது
இலக்கியப் பீடம் ——-ஆசிரியர் திரு. கண்ணன் விக்கிரமன்
11.
தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்
12.
பாரிவேந்தர் பைந்தமிழ் விருது
பேரா. ஆறு. அழகப்பன
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் கூறுகையில் பொறியியல் மருத்துவம் போன்ற கல்வி தந்து கொண்டிருக்கின்றது என்ற கருத்தை மக்களுக்கு அதிகமாக சென்று கொண்டு தருகிறது இந்த பல்கலை கழகம், குறிப்பாகவே பெரும்பாலும் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி இங்கு எல்லாம் பேராசிரியர்கள் அதிகமாக கவனத்தில் கொள்வது எப்படி மாணவர்களுக்கு கற்பிப்பது, ஒழுக்கமுடையவராக்குவது, அதற்க்கான பட்டத்தை கொடுப்பது அதன் மூலமாக நல்ல வேலைக்கு செல்வது போன்ற எண்ணங்களில் தான் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள், இந்த பல்கலை கழகமும் அப்படிதான் இருந்தது. 2011ம் ஆண்டிற்க்கு முன்னால் 2011ல் இந்த பல்கலை கழகத்திற்க்கு துணை வேந்தராக பென்னவக்கி என்பவர் வந்தார். தமிழ் ஆர்வம் கொண்டவர். அவர் சொன்னார் இந்த பல்கலை கழகத்தில் தமிழ் பேராயத்தை ஆரம்பிக்க வேண்டும், அது நாண்காவது தமிழ் சங்கமாக இருக்க வேண்டும். அதன் மூலமாக தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் படைப்பாளிகளுக்கு எல்லாம் விருதுகள் வழங்க வேண்டுமெ அவர் துவங்கினார். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து ஒவ்வெரு ஆண்டும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த பேராய நிகழ்ச்சிகளில் பல பெருமைக்குறிய மதிக்கதக்கவர்கள் எல்லம் வந்து தலைமை ஏற்று நடத்தி கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நடக்கிறது என்றால் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மாஹாராஷ்ரா ஆளுநர் நல்ல கொள்கைக்கு சொந்தகாரர், பெருமையானவர், உண்மையானர், உத்தமர் என சொல்லகூடிய என் நல்ல நண்பர் தங்களுக்கு விருதுகள் வழங்க உள்ளார். ஆகவே முன்பு காலங்களை விட இது சிறப்பான விருது வழங்கும் விழாவாக நான் கருதுகிறேன். எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழை வளர்ப்பதற்காக சிந்தித்து மங்காத தமிழென்ற சங்கே முழங்கு உயிர் என் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்ற கருத்தை எத்தனையோ பெரியவர்கள் எல்லாம் இந்த தமிழின் சிறப்பை பற்றி எல்லாம், அதல் அர்வமுடைய அத்தனை பேரும் தமிழை உயிருக்கு உயிராக நேசித்து இந்த வாசகத்தை சொல்லி சென்றார்கள். இன்றைக்கு விருது பெருகிற மதிப்பிற்க்குறிய பாராட்டுக்குறிய விருதாளர்கள் மிக கவனத்துடன் தேர்வு செய்து அமர்தி இருக்கிறார்கள். இந்த விருதாளர்களை தேர்வு செய்கிற வகையில் எந்த வகையிலும் நானும், என் பல்கலை கழகமும், சார்ந்தவர்களோ தொடர்பில் இருக்க மாட்டோம், விருதாளர்கள் யார் எல்லாம் விருபெருகிறீர்களோ அத்தனைபேரும் தகுதியாளர்கள் என்பது மிகவும் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு தேர்வு செய்திருக்கிறார்கள். ஆகவே எதே எஸ்.ஆர்.எம் பல்கலை கழகம் நடத்துகிறது. தேர்வு செய்கிறார்கள் அந்த அந்த துறை சேர்ந்தவர்கள். ஆகவே எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் சேர்ந்த வேந்தருக்கோ, மற்றவருகே, நண்பர்கள் யாருகோ இந்த விருதினை பெற்று விட முடியும் என நினைத்தால் அது தவறான கருத்து அகவே தமிழ் பேராயம் செயல்பாடுகள் முக்கியம் தனித்துவம் வாய்ந்தது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில் இருக்கிற தமிழறினர்கள் அறிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தகுதி இருந்தால் வருங்காலத்திலேயே இது ஒரு பல்கலை கழக நிகழ்ச்சியோடு இல்லாமல் உலக தமிழர்கள் எல்லாம் ஒன்று கூடி அவர்களை பெருமைபடுத்தும் விழாவாக இருக்க வேண்டும், என்பது தான் எனது வேண்டுகோள், அந்த வகையிலே இது போன்ற விழா இன்று நடந்து வருகிறது. என்னுடைய விருப்பமெல்லாம், இந்த தமிழ் பேராயம் நாங்காளாகவே நான்காம் தமிழ் சங்கம் என்று சொல்லிக்கொள்ள பெருமை இல்லை, பெருகிற விருதாளர்கள் இதன் அருமை பெருமை அறிந்து உங்களுடன் தொடர்பில் உள்ள நண்பர்களுக்கு எல்லாம் எடுத்து சொல்லி இன்றைக்கு வந்துள்ள எண்ணிக்கை போன்று பல பல மடங்கு ஆகவேண்டும் என்பது எனது விருப்பம். மத்திய அரசு கொடுக்கின்ற விருதுகள் அறிவீர்கள் சில நேரங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தருகின்ற விருதை போல் இதை தொடர்ந்து வருகின்றன மைய அரசு விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பது சான்று உண்டு. அந்த வகையில் உங்களில் பல பேர் அந்த மைய அரசின் உடைய பெருமைக்குறிய விருதுகளை பெருவீர்கள் என வாழ்த்துகிறேன்.
தமிழ் மொழிக்காக உலக அளவில் அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துகிறது. அதன் பொருப்பாளர்கள் கடந்த ஆண்டு எங்களிடம் வந்து உலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டுமெ கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் உலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடத்த உள்ள பொருப்பாளர்களை நான் இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பல்கலை கழகத்தில் உலக அளவிலே, இந்திய அளவிலே எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நாடு போற்றுகிற வகையில் இருக்கும். அந்த வகையில் தான் இந்த உலக தமிழர் ஆராய்ச்சி மாநாடு வருகிற 2025ம் ஆண்டு நடத்த வேண்டும், வரலாறாக மாற வேண்டும். அதில் விருது பெருகிற நீங்கள் எல்லாம் பங்கு பெற வேண்டும். உங்களால் எந்த வகையில் வழி செய்ய முடியுமோ அந்த வகையில் வழி செய்ய வேண்டும், இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக பெருப்பேற்று ஏற்பாடு செய்த பெருப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மஹாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. இராதாகிருஷ்ணன்,
இந்த தமிழ்ப்பேராய நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்வதில் பெரிய மகிழ்ச்சி என்ன வென்று கேட்டாள் தமிழ் உணர்வு என்பது ஏதே தேசியத்திற்க்கு எதிரானதாகவும், தேசியம் என்பது தமிழ் உணர்விக்கு எதிரானதாகவும் தமிழகத்தில் ஒரு கருத்தை உண்மைக்கு மாறாக நிலைநாட்டி இருக்கிறார்கள், இதை தகர்த்து எரிய வேண்டுமென்பது தான் என்னுடைய எண்ணமும், நம்முடைய பாரிவேந்தர் என்னமும் ஆகும் பாரதியை போல கம்பனுக்கு பிறகு தமிழுக்கு தொண்டாட்டியவர் யாரும் இல்லை. அந்த தேசிய கவி இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறார் என்ற உணர்வு தான் நமக்கு வந்திருக்கிறது. இங்கே பாரதி தாசனுடைய வாரிசு இங்கே அமர்ந்து இருக்கிறார். உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. பாரதிதாசன் தேசியத்திற்க்கு மாறான எண்ணங்களை கொண்டவராக இருந்தாலும், அவர் பாரதியாரோட இணைந்து பணியாற்றுவதில் ஒருபோதும், மாற்று கருது இல்லை. அதனால் தான் தன்னுடைய பெயரையே பாரதிதாசன் என்று வைத்து கொண்டர். தமிழ் தேசியத்திலிருந்து தனித்து விடப்படக்கூடிய நிலை என்பது தமிழகத்திற்க்கு மட்டும் அல்ல, தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, தமிழுக்கு கூட அது சிறப்பாக இருக்காது என்கின்ற எண்ணம் என்னுடைய மனதிலே எப்போது ஓங்கி உயர்ந்தே நிற்க்கிறது. அந்த வகையில் நமது எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி நிறுவனர், பாரிவேந்தர் திகழ்கிறார். இந்த தமிழ்பேராய விருதுகள் ஒன்றை பறை சாற்றுகிறது. நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள், அதை நீங்கள் புத்தகமாக படைத்துக் கொண்டே இருங்கள். எங்களை போன்றவர்கள் படித்துக்கொண்டே இருக்கிறோம். அப்போதுதான் தமிழ் மறையாமல் வாழ்லும் என்ற உணர்ந்த சிந்தனையை, மாற்றுவதாக உள்ளது. வாழ்நாளில் ஒருபோதும் கற்றது போது என்று ஒருபோது நினைத்து விடாதீர்கள். கற்பதை தொடருங்கள். கற்பதை தொடரும் போதுதான் மேன்மேலும் நம்மை நாமே மெருக்கூட்டிக்கொள்வோம். மனித வாழ்வு என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலேயே இருக்கிற காலம் தான். பாரிவேந்தருடைய வாழ்க்கை எல்லோருக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக உள்ளது. தான் வளர்கின்ற போது எல்லாம், எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும், எல்லோருக்கும் உதவ வேண்டும், என்ற பெரும் கொடை சிந்தனைக்கு உரியவராக விளங்குகிறார். அதுமட்டுமின்றி தாய் தமிழ் அறிஞர்களை அழைத்து அவர்களை பாராட்டுவதும், ஊக்குவிப்பதும், அரிய பரிசுகளை தந்து. வாழ்வாங்கு வாழவைப்பது பாராட்டுக்குறியது. இதுபோன்ற பல்கலைகழகம் ஒரு லட்சம் மாணவர்கள், அதிலே முக்கியமாக மருத்துவதை படிக்கிறார்கள், பொறியியல் படிக்கிறார்கள், இதியெல்லாம் தமிழுக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று என எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதனால் தான் நமது பாரத பிரதமர் அவர்கள் ஒரு தேசிய கல்வி கொள்கையை தந்திருக்கிறார்கள். அது என்னவென்றார். நீ எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் கூடி தமிழ் படிக்க விருப்பினால் அதற்க்கு குறிய புத்தகங்களை உறுவாக்க வேண்டும், அதற்க்கு எற்ப கல்லூரிகளை அமைக்க வேண்டும். அதுதான் இந்த புதிய கல்வி கொள்கை. ஜப்பன் நாட்டில் ஜப்பன் மொழியில் மட்டுமே கல்வி கற்கிறார்கள், சீனம் பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்ந்தாலும் சீன நாட்டிலும் அந்த மொழியிலேயே கற்கிறார்கள், தமிழகத்தை பொருத்தவரையில் தமிழை பற்றி அதிகம் பேசுகிறோம் உள்மனதில் ஆங்கிலம் மோகம் கொண்டவர்களாக தான் இருக்கிறோம். எதே ஆங்கிலத்தில் பேசினால் தான் அறிவு என்பதை போல, தமிழில் ஒருவர் பேசினால் அவருக்கு சிந்தனையில், திறமையில் குறைபாடு ஏற்பட்டவர் போல நினைக்கின்ற மனோபாவம் நம்மிடம் இருந்து விலக வேண்டும். ஆங்கில கல்விதான் சிறந்தது என்கின்ற எண்ணம் மாற வேண்டும். தாய்மொழி கல்வி போற்றி பாதுக்காக வேண்டும். ஒரு மொழியை காக்க வேண்டும் என்று சொன்னால் தமிழ் வளர்ச்சிக்கு அத்தனை முயற்சிகளையும் செய்ய வேண்டும். நான் நமது தமிழ் போராயத்திற்க்கு வைக்கிற வேண்டுகோள் உலகம் முழுவது இருக்கின்ற தமிழர்களை ஒருங்கிணைக்கின்ற நிகழ்வாக மாற வேண்டும். ஒரு நாள் நீங்களே உலக தமிழர் மாநாட்டை நடத்த வேண்டும். நீங்கள் உலகத்தில் எங்கு நடத்தினாலும் சரி எங்களை போன்றவர்கள் உங்கள் பின்னால் இருந்து அத்துனை உதவிகளையும், உழைப்பையும் தருவோம். இந்த தருணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த ஆண்டுக்கான தமிழ்பேராயம் விருதுகள் வழங்கும் விழா -2024 நிகழ்ச்சி. காட்டாங்குளதூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்றது.
வளது புறத்தில் இருந்து இடது புறம்:-
எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம், தமிழ்ப்பேராயம் தலைவர் முனைவர் கரு. நாகராசன், எஸ்.ஆர்.எம் நிறுவனரும், தமிழ்ப்பேராயம் நிறுவனவேந்தருமான டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினரக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் மாண்புமிகு சி.பி. இராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி குழுமத்தின் துணை வேந்தர் முனைவர் செ. முத்தமிழ்ச் செல்வன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி இராமாபுரம் & திருச்சி வளாகம் இணைத் தலைவர் திரு. சி.நிரஞ்சன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி குழுமத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, மற்றும் படைபாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதற்க்கான குழு படம்.