எம்.ஜி.ஆர் ரசிகன்
ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கோபிகாந்தி பல்வேறு “சமுதாய விழிப்புணர்வு குறும்படங்கள்” மற்றும் “முதல் மாணவன்”, “வைரமகன்”, “வீரக்கலை” திரைப்படங்களையும் தயாரித்து, கதை எழுதி, நடித்து வெளியீடு செய்துள்ளார். தொடர்ந்து “உச்சம் தொடு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது “எம்.ஜி.ஆர் ரசிகன்” படத்தை முதல் முறையாக இயக்கி, தயாரித்து, நடிக்க உள்ளார்.
எம்.ஜி.ஆர் ரசிகன் படத்தின் பாடல்கள் குறித்து இயக்குனர் கோபிகாந்தி கூறியதாவது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்தின் பாடல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இருக்கும், அதேபோல் “எம்.ஜி.ஆர் ரசிகன்” பாடல்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.பிரபல இசைக்கவிஞர் சௌந்தர்யன் மற்றும் அவரது மகன் அமர்கீத் இணைந்து இசையமைப்பாளரக பணியாற்ற உள்ளார்கள். இன்றைய காலத்திற்கேற்ப கதைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மெட்டுக்களை இசைக்கவிஞர் சௌந்தர்யன், அமர்கீத் ஆகியோர்கள் உருவாக்கி வருகிறார்கள். பாடல் வரிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். படத்தின் பாடல்கள் மிகவும் பேசப்படும் அளவிற்கு உருவாக்க இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், அமர்கீத் இருவரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும், எம்.ஜி.ஆர் ரசிகன் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். ஒளிப்பதிவாளராக குமரன் ஜி, படத்தொகுப்பாளராக கோகுல் கிருஷ்ணா, நடன இயக்குனராக ஜோய்மதி, சண்டை பயிற்சி அசால்ட் மதுரா, தயாரிப்பு மேலாளராக சக்திவேல் பணிபுரிகின்றனர். மேலும் பிரபல தொழில்நுட்ப கலைஞர்களும் நடிகர், நடிகையர்களும் பணியாற்ற உள்ளதாகவும், ஆர்.பி.எல் நிதிநிறுவனம் மூலம் பைனான்சியர்கள் புதுச்சேரி வடிவேல், கேரளா குமார் படப்பிடிப்புகளுக்கான பணிகளை கவனித்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர், நடிகர் கோபிகாந்தி கூறினார்.