‘என் பெயர் ஆனந்தன்’ திரைப்பட விமர்சனம்
நடிகர், நடிகைகள்-;
சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .
தொழில்நுட்ப கலைஞர்கள்-;
இயக்குனர் – ஸ்ரீதர் வெங்கடேசன், பாடல்கள்: புருஷோத்தமன், வீரையன்,படத்தொகுப்பு: விஜய் ஆண்ட்ரூஸ்,ஒளிப்பதிவு : மனோ ராஜா,இசை : ஜோஸ் பிராங்க்ளின்,தயாரிப்பு : க னகா வெங்க டேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா , தயாரிப்பு நி றுவனங்கள் – சவீத சினி ஆர்ட்ஸ், காவ்யா புரொடக்சன்ஸ் மற்றும் பலார் பண்ணியாடி ற்றினார் .
திரை கதை-;
நாயகன் சந்தோஷ் பிரதாப், படத்தில் ஒரு இயக்குனர். நான்கு குறும்படங்களை இயக்கி, ஒரு பெரும் ஹீரோவை வைத்து மிகப்பெரும் பொருட் செலவில் ஒரு படத்தை இயக்கும் வய்ப்பை பெறுகிறார். தனது கனவு, நிறைவேற போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருக் கிறார் சந்தோஷ்.முதல் நாள் படப்பிடிப்பிற்கு தனது வாகனத்தில் செல்கிறார் சந்தோஷ், அப்போது காரில் மறைந்திருந்த நபர் ஒருவர் சந்தோஷை தாக்கிவிட்டு அவரை கடத்திச் செல்கிறார். படப்பிடிப்பு நின்று விடுகிறது. சந்தோஷ் ஏன், எதற்காக கடத்தப்பட்டார்..? கடத்தியவர்கள் யார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;
திரைப்பட விமர்சனம்-;
நாயகன் சந்தோஷ் பிரதாப் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தீபக் பரமே ஷ், அரவிந்த் ராஜகோபால் இருவரும் தேர்ந்தெடுத்த நடிப்பை கொடுத்துள்ள னர். ஆங்கா ங்கே எட்டிப் பார்த்துச் செல்லும் கதாபாத்திரம் தான் அதுல்யா ரவிக்கு. இரண்டாம் பாதி யில் தெருக்கூத்து ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மிகச் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டது க்கு இயக்குனருக்கு வாழ்த்துகள். இன்றைய தெருக்கூத்து கலைஞர்கள் படும்பாடு, அவ ர்களின் நிலை என இறுக்கமான மனதோ டு அவர்களின் வாழ்வியலை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். உலக சினிமா வை அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் உள்ளூர் சினிமாவை, உள்ளூர் கலைஞர்களை வாழ வையுங்கள் என்பதை ஆணித் தன மாக ஒரு கருத்தை உள்ளடக்கியுள்ளார் இயக்குனர்.
வாழ்வியலான கதை தான் என்றும் வெற்றி பெறும், உலகம் அதை திரும்பி பார்க்கும் என் பதையும் இயக்குனர் சொல்ல மறக்கவில்லை…. தெருக்கூத்து கலைஞர்களை மையப்படு த்தி எடுக்கப்பட்ட இப்படத்தை, சரியான முறையில், தெளிவான நடையோடு படம் முழுக்க கூறியிருந்தால் இன்னும் சிறப்பான ஒரு படமாக இது அமைந்திருக்கும். மனோ ராஜாவின் ஒளிப்பதிவு கலர் ஃபுல்…வழக்கொழிந்து வரும் கூத்துக் கலையின் அருமை பெருமைக ளை கொஞ்சமாய் எடுத்துச் சொல்லி அந்த கலையை, கலைஞர்களை பெரிதாய் மதிக்கத் தூண்டும் முயற்சி!திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்ற படங்களை இயக்கிய இயக் குநர் ஒருவரை ஒரு சிறு குழு தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து கட்டிப்போடுகிறது. குழுவின் தலைவர், அந்த இயக்குநர் எடுத்த படங்களைப் போட்டுப் பார்த்து படம் குறித்த கருத்துக்களை அவரிடம் பகிர்ந்து கொள்கிறார்.
கூடவே நல்ல படம் எடுக்கச் சொல்லி வலியுறுத்துகிறார். நிறைவாக பகீர் சம்பவம் ஒன்று நடக்கிறது… அந்த குழுவினர் வலியுறுத்திய நல்ல படம் எது? அதை வலியுறுத்த இயக்குந ரை கட்டிப் போட்டு வதைக்க வேண்டிய அவசியம் என்ன? இயக்குநர் நல்ல படம் எடுத்தா ரா? நடந்த பகீர் சம்பவம் என்ன?… அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பே என் பெயர் ஆனந்தன். இயக்கம்: ஸ்ரீதர் வெங்கடேசன்ஆறு சிறு படங்களின் தொகுப்பாக இரண்டு வருடங்கள் முன் வெளிவந்த ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ என்ற படத்தை இயக்கி ‘அட’ போட வைத்தவர் இவர்.நாயகன் சந் தோஷ் பிரதாப், நாயகி அதுல்யா ரவி, அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் என படத்தில் மிகச் சில கதாபாத்திரங்கள் மட்டுமே. தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது நடிப்பு என்கிற பெயரில் பெரிதாய் உழைப்பைக் கொட்டத் தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்பதை உணர்ந்து இயல்பாக நடிக்க முயற்சித்திருக் கிறார்கள்.
கூத்துக் கலைஞர்களாக வந்து ஆடுபவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். கூத்துக் கலைஞ ர்க ளின் ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் புருஷோத்தமன் விரய்யனின் பாடலுக்கு ஸ்பெ ஷலாய் ஒரு பாராட்டுப் பூங்கொத்து!மெல்ல நகரும் திரைக்கதைக்கு தனது பின்னணி இசையால் வேகம் கூட்ட மெனக்கெட்டிருக்கிறார் ஜோஸ் பிராங்ளின். மனோ ராஜாவின் ஒளிப்பதிவு பக்கா!ஹாலிவுட் படங்களில் திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் பிரபலம் மைக் வில்சன் என்பவருடன் விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக் கினா ர்கள் என்பது முன்பு இந்த படம் குறித்து வந்த செய்தி!படத்தின் துவக்கத்தில் பத்திரி கை யாளரும், சினிமா விமர்சகருமான ‘கார்ட்டூனிஸ்ட்’ மதன், படத்தைஅப்படி இருக்கும், இப்ப டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் பாருங்கள். வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள்’ என்கிறார். அவர் சொல்வது சரியாக இருக்கிறது!ஆம், ஹீரோயிஸ கமர் ஷியல் அம்சங்கள் தவிர்த்த வித்தியாசப் பட விரும்பிகளுக்கு என் பெயர் ஆனந்தன் ஆ னந்தம்!
இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்.
எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 2.5 / 5