என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே!
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனர் ராஜே ஸ்வரி தேவதாஸ்
மத்திய, மாநில அரசுகளைவிட மக்களுக்கு மிக அணுக்கமாகவும், நெருக்கமாகவும் இருப் பது உள்ளாட்சி அமைப்புகள் தான். உள்ளாட்சி என்பது மக்கள் தங்களது சிறிய அளவி லான சமூகத்தின் தேவைகளைத் தாங்களே தீர்மானித்து, நிறைவேற்றிக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் அமைப்பு முறையாகும். உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற் கவும், கேள்விகள் கேட்கவும், நிராகரிக்கவும், சரிப்படுத்தவும், தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்குமான அதிகாரத்தைப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கு ஒரு தனிச்சிற ப்பா ன அதிகாரத்தை வழங்கியுள்ளது. அது கிராம சபை எனும் சக்தி. கிராம சபை என்பது மக் களவைக்கு இணையானது என உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. இது இந் திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட சபை. கிராமத்தில் செய்யப்படும் ஒவ்வொ ரு ரூபாய் செலவும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். செய்யப்பட்ட, செய்யப் படும் ஒவ்வொரு வேலையும், திட்டமும் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் மக்கள் நலத்திட்டங்களை செய் யுமாறு ஊராட்சி ஆணையரையும், மாவட்ட ஆட்சியரையும் கேட்க முடியும். ஏன் செய்து தரவில்லை என்று காரணமும் கேட்க முடியும். அவர்களும் விளக்கம் அளித்தாக வேண்டும். இத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருப்பது கிராம சபை ஆகும்.
இந்நிலையில் கிராம சபையை சிறப்பாக நடத்தும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் “ராஷ்ட்ரிய கௌரவ் கிராம சபா விருது” 2014-15-ம் ஆண்டிற்காக, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பேரட்டி கிராம ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு இதற்கான பரிசுத்தொகையான ரூபாய் 10 லட்சத்தை பேரட்டி கிராம பஞ்சாயத்தின் தலைவர் மு.ராஜேஸ்வரி தேவதாஸ் பிரதமர் மோடியிடம் இருந்து பெற்று இருக்கிறார்.
கிராம சபையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து, அதனை திறம்பட நடத்தி பேரட்டி கிராம ஊராட்சியின் புகழை இந்தியா முழுமைக்கும் பறைசாற்றி, இன்றும் மக்கள் நல அறக்கட்டளை மூலம் மக்கள் பணியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ராஜேஸ்வரி தேவதாஸ் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நம்மில் பலருக்கு தந்தை தான் முதல் ஹீரோ. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என் பர். நமது நலனில் முழு அக்கறை கொண்டு, நம்மை வளர்த்து, நல்ல பண்புகளை சொல்லி கொடுத்து, வாழ்க்கையில் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வதும் அப்பா தான். என்னு டைய அப்பா எம்.கே. பட், கூட்டுறவுத் துறையில் இணைப்பதிவாளராக பணியாற்றியவர். அவர் தனது சொந்த பணிகளுக்காக எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தியது கிடையாது. அவர் தன்னுடைய கடமையை செவ்வெனச் செய்தவர். கட மை யை செய்யும் போது நேர்மையும், உண்மையும் முக்கியமானது என்பதனை எனக்கு நன்கு உணர்த்தியவர் என் அப்பா. என் அம்மா தேவகி, கருணை உள்ளம் கொண்டவர். உதவி என்று யார் வந்தாலும் உடனடியாக உதவி செய்தவர். ‘இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ‘ என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக என் அம்மா வாழ்ந்து, எனக்கும் வழி காட்டியவர். அதன் மரபு வழி தொடர்ச்சியாக நானும் மக்கள் நலப்பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
மனையியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டமும், பி எட் பட்டப்படிப்பும், அமெரிக்காவில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டமும் பெற்று இருக் கின்றேன். உதகமண்டலத்தில் உள்ள செயிண்ட் ஹில்டாஸ் பள்ளி மற்றும் குட் ஷெப்பர்ட் பள்ளி போன்றவற்றில் ஆசிரியையாக பணி புரிந்தேன். மாற்றுத்திறன் கொண்ட குழ ந்தைகள் மற்றும் ஏழை குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு எனது தாயார் நினை வாக அவருடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தேவி நர்சரி பள்ளியில் அவர்களுக்கு இல வசமாக கல்வி கற்பித்தேன்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலகட்டதில் திரு ச்சியில் எனது அப்பாவுடன் இருந்தேன். பின்னாளில் நான் நீலகிரிக்கு வந்தேன். அன் றைய காலகட்டத்தில் படுகர் இன மக்களில் பெரும்பாலானவர்கள் திறந்த வெளி யைத் தான் தங்களது இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்தி வந்தனர். அனைவ ருக்கும் தங்களது வீட்டிலேயே கழிப்பறை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது அப்பா மக் களுக்காக தனது சொந்த செலவில் கழிப்பறையை கட்டி கொடுத்தார். இது என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறாக சமூகப்பொறுப்பு என்னை கொஞ் சம், கொஞ்சமாக ஆக்கிரமித்தது. மக்களின் குடும்ப பிரச்சனையாகட்டும், போதை பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது ஆகட்டும், மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் பா லியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பது ஆகட்டும் என்னுடைய பங்களிப்பு தொ டர்ந்தது.
நான் சமூக அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததென் விளைவாக, மக்கள் நல ப்பணியை அர சியல் அதிகார பொறுப்புடன் செய்தால் அதன் தாக் கமும், விளைவும் அதி கம் என்று எனது மகன் விவேகானந்தன் கூறியதை அடுத்து, கடந்த 2006-ம் ஆண்டில் நான் பேரட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். முழு சுகாதார இயக்கத்தின் கீழ் பேரட்டி கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தினேன். இதற்காகவே கடந்த 2008-ம் நிர்மல் புரஸ்கார் விருது அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கைகளினால் நான் வாங்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் ஏழை மக்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்தேன். இதன் மூல ம் பல ஏழை, எளியவர்களுக்கு உதவித்தொகை கிடைத்தது எனக்கு மன நிம்மதியை அளி த்தது. இது தவிர பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தோம். குறிப்பாக சாலை வசதி, குடிநீர் தேவை, வீடுகளுக்கு மின்சாரம் போன்றவைகள் கிடைக்க வழி வகை செய்தேன். அரசு ஒதுக்கும் நீதி தவிர எனது குடும்பத்தின் மீதான நல்ல அபிப்ராயம் கார ணமாகவும், எனது மகனின் மக்கள் தொடர்பு காரணமாகவும் பல நல்ல உள்ளங்களின் நீதி உதவியாலும் பேரட்டி கிராமத்திற்கு பல மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றினே ன்.
மக்கள் என் மீது கொண்ட நம்பிக்கையாலும், அன்பாலும், எனக்கு இரண்டாவது முறை யாக பேரட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவியை தந்தனர். சமூக சேவை, பெண்கள் முன்னேற்றம், முதியோர் நலன், குழந்தை மேம்பாடு, மாற்று திறனாளிகள் நலன், சுகாதா ர மேம்பாடு போன்றவற்றிற்காக தொடர்ந்து செயல்பட்டேன். கடந்த 2012-ம் ஆண்டில் முழு சுகாதாரம், முதியோர் உதவித்தொகை (தமிழ் நாட்டிலேயே அதிக அளவில்) , பள்ளிக ளுக் கு தேவையான உபகரணங்கள் வழங்கியது தொடர்பாக மத்திய அரசின் பஞ்சா யத்து ஷாஷக்தி கரண் புரஸ்கார் விருதும் கிடைத்தது. நம் மாநில அரசின் உத்தமர் காந்தி விரு தும்,குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்ததிற்காக விருதும், சமத்துவம் விருதும் கி டைக்கப் பெற்றேன்.
நான் தற்போது ‘ராஜேஸ்வரி தேவதாஸ் மக்கள் நல அறக்கட்டளை’ ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றேன். நான் அரசியல் அதிகாரப்பொறுப்பில் இல்லாவிட்டாலும் தொட ர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு மக்கள் நலனுக்காக செயல்படவே இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமாகும்.
தற்போது உலகையே புரட்டி போட்டு இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி, மருத்துவ உதவிகள், மளிகை மற்றும் இதர பொருட்களையும் வழங்கி வருகின்றேன்.
ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை தேர்ந்து எடுக்கப்பட்டபோதும், தற்போது மக்கள் நல அறக்கட்டளை தலைவராக இருந்தாலும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசரின் பொன் மொழிக்கு ஏற்ப ராஜேஸ்வரி தேவதாஸ் மக்கள் நலப்ப ணியில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.
பொதுவாகவே படுகர் இன மக்களின் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்திலும், அமைச்சர வையிலும் போதுமானதாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இது போன்று மக்கள் நலப்பணியில் முழுமையாக ஈடுபட்டு , பல சாதனைகளை செய்த ராஜேஸ்வரி தேவதாஸ் போன்றோர் ஏன் அடுத்த கட்டத்திற்கு செல்லக் கூடாது என்றும் அதன் மூலம் மக்கள் முழுமையாக பயன் அடைய முடியும் என்றும் மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.