இயக்குநர் பாலா வழங்கிய பாராட்டு!

இயக்குநர் பாலா வழங்கிய பாராட்டு!

இயக்குநர் பாலா அவர்களின் ‘பரதேசி’ படத்தில் கலை இயக்குநராக அறிமுகமானவர் பா லச்சந்தர். சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கலை இயக்குநருக்கான விருதை ப ரேதேசி திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். பாலச்சந்தர் கலை இயக்குனராக பணியா ற் றிய முதல் திரைப்படம்  பரதேசி என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று. 

பாலசந்தர் உங்கள் முன்கதைச் சுருக்கம்  கொஞ்சம் சொல்ல முடியுமா?

எனக்கு  சொந்த ஊர் புதுக்கோட்டை .சிறுவயதில் இருந்து எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வ ம் அதிகம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பை முடித்தேன். அதன் பி றகு சில வருடம் குமுதம் பத்திரிகையில் ஓவியராக வேலை செய்து, பின்னர் கலை இய க் குனர் முத்துராஜ் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன்.

ஜெயராம் ,காதல் சந்தியா நடித்த   ‘ஆலிஸ் இன் ஒண்டர் லேண்ட்’  மலையாள திரைப்ப ட மே உதவியாளராக நான் பணியாற்றிய மறக்க முடியாத முதல் திரைப்படம். அதன் பிறகு  ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’, ‘பழசி ராஜா’, ‘நண்பன்’, ‘அவன் இவன்’, மற்றும்  ‘ஐ’ தி ரைப்படம் வரை உதவியாளராகப் பணியாற்றினேன். ‘அவன் இவன்’ படத்தில் நான் பணி யாற்றிய போது இயக்குநர் பாலா சார் என்னை கவனித்திருக்கிறார். அப்போது என்னை அழைத்து தனியாக படம் கொடுத்தால் செய்வியா என்று கேட்டார். முதலில் நான் கிண்ட லாக சொல்கிறாரோ என்று நினைத்தேன். செய்ய முடியுமா என்று அழுத்தமாக கேட்டதும் முடியும் என்று சொன்னேன். குருநாதர் முத்துராஜ்  சாரிடம் விவரம் சொன்னபோது, பாலா சாரே அழைக்கிறார் என்றால் மிகப்பெரிய விசயம்  தைரியமா இரவு பகல் பாக்காம உ ழையுங்கள்  என்று வாழ்த்தினர்.  சொன்னது போலவே பாலா சார் ‘பரதேசி’ படத்துக்கு அ ழைத்தார். நான் என் குருநாதர் முத்துராஜ் அவர்களின் ஆசியுடன் கலை இயக்குன ரா னேன்.

‘பரதேசி’ படத்தின் அனுபவம் எப்படி இருந்தது?

படம் பற்றிச் சொல்வதற்கு முன் பாலா சார் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் லேசில் திரு ப்தி அடைய மாட்டார். சமரசம் செய்து கொள்வது ,போதும் பார்த்துக் கொள்ளலாம் என்ப தெல்லாம் அவரிடம் எப்போதும் கிடையாது. அவருக்கு திருப்தி வரும்வரை வேல செய் ய வைப்பார், அதுவே எனக்கு  பெரிய அனுபவத்தையும் பொறுமையையும் கொடுத்தது.

பரதேசி ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கதை. படத்திற்காகக் குடிசைப் பகுதிகள், இயற் கை யாக இருக்க வேண்டும் என்று தேடினோம். அந்த காலத்தில் வறுமையில் வாழ்கிறவ ர் களின்  குடிசைகள் பெரும்பாலும் பனை ஓலையில் முடயப்பட்டிருக்கும். அதனால் நி னை த்த மாதிரி குடிசைகள் எதுவும் கிடைக்கவில்லை. நான் ஒரு மாதிரிக்காக ஒரு குடி சையை அமைத்துக்  காட்டினேன். சாதாரணமாக அவர் சமாதானம் ஆக மாட்டார். அப்ப டிப்பட்டவ ருக்கு அது பிடித்து விட்டது. முதலில்  நாற்பது குடிசைகள் பெரியகுளம் அருகே சோத்துப் பா ளையம் என்ற இடத்தில் போட்டுக் காட்டினேன். அவருக்குப் பிடித்து விட்டது. அதை  மூ ணாறு எஸ்டேட்டுக்காக மேட்ச் செய்தோம். பிறகு கயத்தாறு பகுதியைக் காட்டு வதற் கா கக் கீழ்பகுதியில் இருக்குமாறு சிவகங்கை அருகில் மேலூர் என்ற இடத்தில் முப்ப து கு டி சைவீடுகள் செட் அமைக்கப்பட்டது. பலா சாருக்கு அதுவும்  பிடித்திருந்தது. அந்த குடி சைகளை பார்த்தவர்கள் யார் இங்கே வசித்தார்கள் என்றும் ஏன் காலி செய்து போ னார் கள் என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு இயற்கையாக அமைந்தி ருந்தது.

அதற்கு காரணம் பாலா சார், எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்டி ப் பாக இருப்பார். கொஞ்சம்கூட செயற்கைதனம் வந்து விடக்கூடாது என்பதில் கறாராக இ ருப்பார். அதை நான் பயிற்சியாகவும் சவாலாகவும் எடுத்துக்கொண்டதால்,  நிறையக் க ற்றுக்கொண்டேன் தமிழக அரசின் விருதை கையில் வைத்திருக்கும்போது எல்லா கஷ்ட் டங்களுக்கும் அர்த்தம் கிடைத்தது போலிருக்கிறது.

‘பரதேசி’  படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் படக்குலுவினருடன் பேசிக்கொண்டிருக்கும் போது பரதேசியில் யாருக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ பாலச்சந்தருக்கு நிச் ச யம் தேசிய விருது கிடைக்கும் என்றார் இயக்குனர் பாலா சார். அப்படி அவர் சொன்ன தே எனக்குத் தேசிய விருது கிடைத்ததுபோலிருந்தது. படம் வெளி வந்த அடுத்த ஆண்டு, பரதேசிக்காக எனக்கு பிஹைண்ட்வுட்ஸ் விருது கிடைத்தது.  இப்போது  தமிழக அரசின் விருது.

தமிழக அரசின் விருதைப் பெற்றுக் கொண்டு, பாலா சாரிடம் காட்டி வாழ்த்து பெற செ ன்றேன். சாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு பொன்னாடை போர்த்தப் போ னேன்.  ‘விருது கிடைத்தது உனக்கு ,எனக்குப் பொன்னாடையா!’ என்று சிரித்தபடியே பொ ன்னாடையைப் பிடுங்கி எனக்கு அவர் போர்த்தி விட்டார். தேசிய விருது வா ங்கி யதற்கு இணையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். பாலா சார், எல்லோருடைய உழைப்பையும் திறமையையும் மதிக்கக் கூடியவர். அது ஒரு மந்திர பூமி, ஒருமுறை சென்று வந்தால் மா ற்றங்களை  உணரலாம். புடம்போட்டு பட்டை தீட்டித்தான் வெளியில் அனுப்பார்.  எனக்கு ம் அந்த வாய்ப்பு கிடைத்து.

 

பரதேசியில் எனது உழைப்பை அப்பட்டமாக காட்சி படுத்தி எனக்கு பெருமை சேர்த்தவர் ஒளிப்பதிவாளர் செழியன் சார். பாலா சாரை நன்கு புறிந்து செயல்படுவார், செழியன் சா ரின் ஒத்துழைப்பும் இந்த விருதிற்கு முக்கியமான காரணம். இந்த தருணத்தில் செழியன் சாருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

இயக்குநர் பாலாவுடன் மீண்டும் இணைந்த அனுபவம் எப்படி?

பாலா சாரை பொருத்தவரை நாம் தேடிபோய் வாய்ப்பு பெற்றுவிட முடியாது அவர் அழை த்தால் மட்டுமே சாத்தியம், மீண்டும் என்னை அழைத்தார். தாரை தப்பட்டை, நாச்சியார் ப டங்களில் மீண்டும் சாருடன் பணியாற்றினேன். தாரை தப்பட்டைக்காகத் தஞ்சாவூரில் ஆ ற்றோரம் நாட்டுப்புற கலைஞர்களின் வீடுகள் செட்போட்டோம்,  எதார்த்தமாக அமைந்த து. பாலா சாருடன் பணியாற்றிய காலங்கள் மறக்கமுடியாதது, மறக்கக்கூடாதது.

ஜிப்ஸி ஒரு நீண்ட பயண அனுபவத்தைத் தந்த படம். ஜிப்ஸியில்  நிறங்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து காட்சிகள் அமைத்திருந்தார் இயக்குனர். வண்ணங்கள் கதா பாத்திரங் கள்போல கதையோடு பின்னப்பட்டிருந்தது, விதவிதமான நிறங்களை காட்சியின் மூடி ற்கு ஏற்ப பயன் படுத்தும் சிறந்த அனுபவம் கிடைத்தது. பலரும் அதைக் கவனித்துப் பா ராட்டினார்கள். ஜிப்ஸி திரைக்கதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணிக்கும். நி லங்கள், மண், வீடுகள் , இப்படி எல்லாமே சமூகச் சூழல்களை பிரதிபளிக்கும் நிறங்களா க  இருக்கும். . ஜிப்ஸி படத்துக்காக  117 நாட்கள்   நாங்களும் ஜிப்ஸிபோல நாடோடிகளாக அலைந்து திரிந்தோம்.

காஷ்மீரின் வெண்பனி நிறத்தையும், செங்கோட்டை யின் செம்மண் நிறத்தையும் காசி யின் பரந்த நீர்ப்பரப்பையும் விரிந்த மணல் பரப்பையும் கேரளாவின் பசுமையையும்  க ன்னியாகுமரியின் பின்புலத்தையும் போல பல வகையான நிறங்கள் அடர்ந்த காட்சி க ளை ஜிப்ஸியில் பார்க்கலாம். கவனிக்காதவர்கள் மீண்டும் கவனித்து பார்த்தால் புரி யும். மக்களின் உடைகள், கலாச்சாரங்கள் என அது ஒரு வண்ணமயமான அனுபவமாக இருந் தது.

காசியின் சின்ன சின்ன சந்துகளிலும் செட் போட்டு வைத்திருப்போம். மறுநாள் அதே இட த்துக்கு போறதுக்கு திசை மாறிப்போயிடுவோ, நாங்க ஒரு இடத்தில போய் நிப்போ ரா ஜு முருகன் சார் அடையாளம் தெரியாமல் குழம்பி வேற எடத்துக்கு போயிடுவாரு, அந்த அ ளவிற்கு செட் எது உண்மை எது என்று தெரியாது. அந்த சந்துகளுக்குள்ள பொருட்கள் எடுத்துட்டுபோய் செட் பண்றது பெரிய சவாலா இருந்தது, பொருட்கள் எடுத்துட்டுபோ வோ திடீர்ன்னு மாடுவந்துடும்,  கடைசிவரைக்கும் ரிவர்ஸ் வரனும். நில அமைப்பே வி த்தியாசமா இருக்கும்.

காசியில் முதல் 15 நாட்கள் கங்கையில் தண்ணீர் அதிகமாக இருந்த காலத்திலும் 15 நாட் கள் நீர் குறைந்த காலத்திலும் படப்பிடிப்பு நடத்தினார்.  அதுஒரு கலர் புல்லான அறிதான அனுபவம். ராஜுமுருகன் சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 

பணியாற்றியதில் மறக்கமுடியாத  படங்கள்?

எல்லா படங்களுமே மறக்கமுடியாத படங்கள்தான். ஒவ்வொரு படமும் நமக்கு எதோ ஒன் றை கற்றுக்கொடுக்கும், இயக்குனர் எஸ் யூ அருண் சாருடன் பணியாற்றிய பண்ணையா ரும் பத்மினியும் மற்றும் சேதுபதி, குற்றம் கடிதல் படத்தை இயக்கிய இயக்குநர் பிரம்மா சாருடன் பணியாற்றிய மகளிர் மட்டும், இயக்குனர் முத்துக்குமார் சாருடன் தர்ம பிரபு. ஒ வ்வொன்றும் ஒருவிதமான அனுபவம்.  

நீங்கள் பணியாற்றிய முந்தைய படங்களின் மூலம் உங்கள் மீது ஒரு முத்திரை விழுந்திரு க்கும். அது இவர் இப்படித்தான் என்று தொடர்ந்து வருகிற வாய்ப்புகளை நிர்ணயிக்குமா?

தொழில்நுட்பக் கலைஞர்களை பொறுத்தவரை முந்தைய படங்களை வைத்து மதிப்பி டு வது திரையுலகில் எதார்த்த மானதுதான். நான் பணியாற்றிய படங்களை வைத்து நான் கிளாஸ் படங்கள் ரகம் என்றும்  பரதேசி, ஜிப்ஸி போன்ற படங்களில்தான் பணியாற்று வேன் என்றும் சிலர் நினைக்கலாம் ஆனால் நான் எல்லா விதமான படங்களிலும் பணி யாற்றவே விரும்புகிறேன் . இயக்குனர் ஷங்கர் சாரின் நண்பன் போன்ற பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.  

எல்லா வகையான படங்களிலும் பணியாற்றுவதே கலைஞர்களுக்கு விருப்பமாக இருக் கும். ஒவ்வொன்றையும் எனது முதல் படமாக நினைத்து சவாலாக செய்யவே விரும்புகி றேன்.  நன்றி.