இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து ’பேராசை’ படப்பிடிப்பை துவக்கி வைத்தார்

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து ’பேராசை’ படப்பிடிப்பை துவக் கி வைத்தார்

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து ’பேராசை’ படப்பிடிப்பை துவக்கி வைத்தார்

மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித் ததோடு, பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினி மாத்துறையில் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற திரைப்படம் மூலம் சினி மாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சினிமாவுக்காக பல வருடங்கள் போ ரா டி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினை த்தி ருந்தால் ரொம்ப எளிதாக சினிமா வுக்குள் ஹீரோவாக நுழைந் திருக் கலாம். காரணம், அவருடைய பின் னணி அப்படிப்பட்டது. ஆம், 1000 திரை ப் படங்களுக்கு மேல் இசைய மைத்திரு க்கும் சங்கர் கணேஷி ன்  மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்ன ணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் தயா ரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும், அவற்றை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் சினி மாவில் பயணித்து வருகிறார்.

தற்போது ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’ திரைப்படம் மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் சமூகத்திற்கான படமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பி னருக்கும் பிடிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாகவும் உருவாகிறது.

ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண்கேசவன், ஷிஹான் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘பேராசை’ படத்தில் ஸ்ரீ-க்கு ஜோடியாக அறிமுக நாயகி தீஷிகா, இரண்டாவது கதாநாயகனாக ராஜா, நடிகை அனுகிருஷ்ணா, நடிகை வெண்பா POWER STAR ஸ்ரீனிவா ஸன், பூ விலங்கு மோகன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக் கிறார்கள்.இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஈசன். சங்கர் கணேஷிடம் பல படங் களுக்கு இசை உதவியாளராக பணியாற்றிய வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இப்படத் திற் கு இசையமைக்க, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். குன்றத்தூர் ஹா ர் ஸ்  பாபு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிகா நடனம் அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்துக் கொ ண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய இசைய மைப்பாளர் சங்கர் கணேஷ், “என் மகன் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுவரை சினி மாவில் அவருக்கு நான் எங்கேயும் சிபாரிசு செய்ததில்லை. அவரே தனது சொந்த முயற் சியால் இந்த நிலைக்கு வந்துள்ளார். பல ஆண்டுகள் சினிமாவுக்காக போராடி வரு கிறா ர். தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களி நடிக்க தொடங்கியவர், இன்று ‘யார டி நீ மோஹினி’ தொடர் மூலம் உல க தமிழகர்களின் உள்ளத்தில் நுழைந்திருக்கி றார். நான் எங்கு சென்றாலும், ஸ்ரீ-யின் அப்பா இவர், என்று சொல்கிறார்கள்.

அதை  கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் சினிமாவிலும் பெரிய பெயர் எடுக்க வேண்டும். ‘பேராசை’ படக்குழுவினர் அனைவரும் பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார். ஹீரோ ஸ்ரீ பேசுகையில், “நான் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம். சந்தோஷமாக இருக்கிறது. இந்த நாளுக் காக தான் காத்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் என் தந்தையும், தாத்தாவும் பெரிய ஜாம் பவான்களாக இருந்தாலும், அவர்களுடைய பெயரை எங்கேயும் சொன்ன தில்லை. எனது சொந்த முயற்சியில் தான் ஒவ்வொரு வாய்ப்பையும் பெற்று வந்தேன். 15 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். ஜூனியர் நடிகராக 50 ரூபாய் சம்பளம் வாங்கி யிருக்கிறேன்.

வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், சினிமாவுக்காக நிறைய கஷ்ட்டங்களை அனுபவி த்திருக்கிறேன். ஆனால், நிச்சயம் சினிமாவில் சாதிப்பேன்.” என்றார். இயக்குநர் ஈசன் பேசுகையில், “இன்று மது பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. சுமார் 99 சதவீதம் மக்கள் மது குடிப்பவர்களாகஇருக்கிறார்கள். அதனால், அவர்களின் குடிக்க  வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், அதை அளவாக எடுத்துக் கொள்ள வேண் டும், என்று சொல் கிறோம். அளவற்ற போதையில் ஏற்படும் விளைவுகளை, கமர்ஷியலாக  சொல்லி யிருக் கிறோம். காமெடி, காதல்,  குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து மக்களு க்கா ன பொழுதுபோக்கு படமாக ‘பேராசை’ இருக்கும்.” என்றார்.