அரிதான மரபியல் பிரச்சனைக்காக எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சைக்குப் பிறகு எக் மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்ட குழந்தை குணமடைந்து சாதனை
அரிதான மரபியல் பிரச்சனைக்காக எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சைக்குப் பிறகு எக்மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்ட குழந்தை குணமடைந்து சாதனை
- ஒரு அரிதான நோய்க்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டதற்குப் பிறகு எக்மோ சாதனத்தின் கீழ் வைக்கப்பட்டு, குணமடைந்து உயிர்பிழைத்த இந்தியாவின் முதல் மற்றும் மிக இளவயது குழந்தை
- உயிர் பிழைப்பிற்கு <1% வெற்றி வாய்ப்புகளே கொண்டிருந்த குழந்தைக்கு உதவிய திறன்மிக்க கிரவுட் ஃபண்டிங் செயல்பாடு
சென்னை, 26 அக்டோபர் 2021: ஒற்றை மரபணு சார்ந்த அழற்சி குடல் நோய் என்ற அரிதா ன மரபணு பிரச்சனைக்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை (பிஎம்டி) மேற்கொ ள்ளப் பட்ட லோச்சன் என்ற பெயரிலான குழந்தைக்கு வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியா யத் தை தொடங்க ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர்கள் உதவி யிரு க்கின்றனர். சிக்கல்களுக்குப் பிறகு இந்த ஆண் குழந்தை, எக்மோ சாதனத்தின் (செயற் கை சுவாசக்கருவி) கீழ் வைக்கப்பட்டிருந்தான். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற் கொண்ட ஒரு குழந்தைக்கு எக்மோ சிபிஆர் செய்யப்பட்டது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். அத்துடன், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையைத் தொடர்ந்து எக்மோ சா தனத்தின் கீழ் வைக்கப்பட்டு, உயிர்பிழைத்த முதல் குழந்தையாகவும் இது இருக்கிறது.
இந்த நேர்வின் விவரங்கள்:
9 மாத வயதில் முந்தைய குழந்தை இறந்ததற்குப் பிறகு, பிறந்து 6 வாரங்களே ஆன லோ ச்சன் என்ற குழந்தை, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான நீர்ச்சத்து இழப்பு பிர ச்ச னை யோடு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இது வொ ரு சாதாரண தொற்றாக இருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைத்திருந்த நிலை யில் IL-10 R குறைபாட்டின் காரணமாக, ஒற்றை மரபணு சார்ந்த அழற்சி குடல் நோய் என அழைக்கப்படும் ஒரு அரிதான நோய் இந்த ஆண் குழந்தைக்கு இருப்பது கண்ட றிய ப்ப ட்டது. இதுவொரு மரபணு சார்ந்த நோயாகும். ஆரம்ப நிலையிலேயே எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை ஒன்று தான் இந்நோய்க்கு செய்யப்படும் ஒரே சிகிச்சையாக இருக் கி றது. கடும் சிரமத்திற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சரின் நிதியுதவி ஆதரவோடு ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் 5 மாத வயதிலுள்ள இக்குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மா ற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு, தொற்றின் காரணமாக இக்குழந்தையின் ஒவ் வொரு உறுப்பையும் சேதப்படுத்திய கடுமையான சிக்கல்கள் இக்குழந்தைக்கு ஏற் பட் டது. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்ட இக்குழந்தையின் சிறுநீரகங்கள், கல் லீரல், இதயம் மற்றும் நுரையீரல்கள் முற்றிலுமாக செயலிழந்தன. உயி ர்பிழை ப்ப தற் கான நம்பிக்கையும் இழக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், இக்குழந்தையை உயிர்பி ழைக் கச் செய்வதற்கான ஒரே விருப்பத்தேர்வாக இருந்தது, எக்மோ (செயற்கை சாதனத்தின் மூலம் சுவாசம்) சிகிச்சை மட்டுமே. இந்த எக்மோ சிகிச்சை கூட செயலிழந்த பிற உட லுறு ப்புகளை சரி செய்வதற்கு உதவாது மற்றும் இதற்கான செலவும் மிக அதிகமாக இருக்கும்.
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள், பல்வேறு சவா ல்க ளி ன் காரணமாக எக்மோ பயன்பாட்டில் உயிர்பிழைப்பதில்லை. எனவே, எலும்பு மஜ்ஜை மா ற்று சிகிச்சை என்பது, குழந்தைகளில் எக்மோ ஆதரவிற்கு எதிர்மறை அம்சமாக கரு தப் படுகிறது. சிறப்பான சிகிச்சை விளைவுகள் இருக்காது என்பதால், முன்பு சிகிச்சை பெ ற்ற மருத்துவமனையில் இக்குழந்தைக்கு எக்மோ செயல்பாடு மறுக்கப்பட்டது; வேறுபிற மருத்துவமனைகளும் இதே கருத்தைதான் கொண்டிருந்தன. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் இந்த அரிதான நோய் இக்குழந்தைக்கு இருப்பது முதலில் கண் டறி யப்பட்டதால் எவ்வளவு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் கூட, தங்களது மரு த்துவமனை சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற அவர்கள் முடிவு செய்தனர்.
ஆம்புலன்ஸின் வழியாக போக்குவரத்து நேரத்தை குறைப்பதற்காகவும் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் வழங்குவதற்கும் தேவையான வசதிகள் இருப்பதை உறுதி செய்வதற்காக முந் தைய மருத்துவமனை குழுவினரோடு ஒருங்கிணைப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டன. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் குழந் தைக ளு க்கான அவசரநிலை சிகிச்சை நிபுணரான அனுபவம் மிக்க டாக்டர். கீதா ஜெயபதி, கு ழ ந்தையை அழைத்து வருவதற்காகவும், போக்குவரத்தின்போது சிக்கல் ஏற்படாமல் தவி ர்ப்பதற்காகவும் நேரடியாக சென்று குழந்தையை அழைத்து வந்தார். இதயத்துடிப்பு நிக ழ்வதற்காகவும் மற்றும் சாத்தியம் உள்ள அளவு அதிகபட்ச இரத்தஅழுத்தத்தை தக்க வை க்கவும் பல்வேறு மருந்துகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டன. இந்த மருந்தளிப்புகள் போ க்குவரத்து நேரத்திலும் தொடர்ந்தன. தொடர்ச்சியான கண்காணிப்பு மருத் துவக் குழு வா ல் உறுதி செய்யப்பட்டது. ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைக்கு பாதுகா ப்பா க வந்து சேர்ந்த குழந்தை, வென்ட்டிலேட்டர், செவிலியர் மற்றும் மூத்த மருத்துவர், மருந் துகள் மற்றும் சாதனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த PICU -க்கு நேரடியாக மா ற்றப்பட்டது. குழந்தை வந்து சேர்ந்த உடன் முக்கியமான பரிசோதனை முடிவுகளை உட னடியாகப் பெறுவதற்கு பரிசோதனையக குழுவும் தயார் நிலையில் இருந்தது. எக்மோ சிக்ச்சையின் கீழ் குழந்தை வைக்கப்படும்போது தேவைப்படக்கூடிய இரத்தம் மற்றும் தொ டர்புடைய பொருட்களை ஏற்பாடு செய்யவும் மற்றும் கொள்முதல் செய்வதற்குமான ப ணியை பரிசோதனையக குழுவினர் ஒருங்கிணைத்தனர். எக்மோ குழுவினரோடு எக் மோ இயந்திரம் மற்றும் சர்க்யூட்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததற்குப் பிறகு சிறிது நேரத்திற்குள்ளேயே குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ரெயின்போ மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிக் சைப்பிரிவு நிபுணர் டாக்டர். கார்த்திக் நாராயணன் தலைமையிலான எக்மோ குழு, இக் குழந்தைக்கு எக்மோ சிபிஆர் சிகிச்சையை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து குழந் தை யின் இதய செயல்பாடு மீண்டும் சரியானது. இக்குழந்தையின் இதயத்தின் மீது செய் யப்பட்ட எக்கோ சோதனை, இரத்தப்போக்கை தடை செய்கின்ற ஒரு பெரிய இரத்தக்கட்டி குழந்தைக்கு இருந்ததையும் மற்றும் இதய செயல்பாடு திடீரென நின்றதற்கு அதுவே கார ணமாக இருந்திருக்கும் என்பதையும் வௌிப்படுத்தியது. உரிய மருந்துகளை தொ டங்கி யதற்குப் பிறகு இந்த இரத்தக்கட்டி கரைக்கப்பட்டது. அடுத்த 20 நாட்களுக்கு எக்மோ ஆதர வு இக்குழந்தைக்கு தேவைப்பட்டது. 20 நாட்களுக்குப் பிறகு எக்மோ இயந்திரத்திலிருந்து லோச்சன் என்ற பெயர் கொண்ட இக்குழந்தையின் இணைப்புநிலை அகற்றப்பட்டது. அத ன்பிறகு டயாலிசிஸ் சிகிச்சையும், பிளாஸ்மா மாற்று சிகிச்சையும் நிறுத்தப்பட்டன. எனி னும், இன்னும் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து வென்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த இக்குழந்தைக்கு மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு சிகிச்சை செய்யப்பட்டதற்குப் பிறகு அ திலிருந்து அகற்றப்பட்டது. இக்குழந்தைக்கு டாக்டர். கார்த்திக் நாராயணன், டாக்டர். நட ராஜ் பழனியப்பன் மற்றும் கீதா ஜெயபதி ஆகியோர் அடங்கிய PICU அவசரநிலை சிகி ச் சை குழுவினர் தொடர் கண்காணிப்பை வழங்கினர். PICU தங்கியிருப்பு நேரத்தின்போது தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக தூய்மை நிலை முன்னெச்சரிக்கைகளை அனுபவம் மிக்க செவிலியர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது.
இரத்தக்கசிவிற்கான இடர்வாய்ப்பை எக்மோ அதிகரிக்கும் என்பதால், மூளை மீதான அ ல் ட்ரா சவுண்டு சோதனை தொடர்முறையாக மேற்கொள்ளப்பட்டது. குழந்தையின் வல து பக்க மூளையில் இரத்தக்கசிவு இருப்பதை அது வெளிப்படுத்தியது. நிபுணத்துவம் மி க்க மருத்துவர்களிடமிருந்து இதற்கான ஆலோசனை பெறப்பட்டு, அந்த இரத்த அடை ப் புக்கட்டி அகற்றப்பட்டது. டாக்டர். சந்தோஷ் மோகன்ராவ் அவர்களால் எக்மோவிலிருந்து குழந்தையின் தொடர்புநிலை அகற்றப்பட்டதற்குப் பிறகு இது செய்யப்பட்டது. எலும்பு ம ஜ்ஜை மாற்று சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சையில் குழந்தைகளுக்கான இரத்தவியல் மருத்துவர் தாரணி ஜெயராமன் அவர்களின் பங்களிப்பு உதவியது.
இந்த நிகழ்வு குறித்து டாக்டர். ஆர். கார்த்திக் நாராயணன் தனது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டபோது, “99% சாத்தியத்துடன் உயிரிழந்திருக்கக்கூடிய ஒரு குழந்தையை கா ப்பாற்றுவது முக்கியம் என்றாலும், அதன்பிறகு திருப்திகரமான மூளை நரம்பியல் இ யல்பு செயல்பாட்டை குழந்தை கொண்டிருப்பதை உறுதி செய்வதில் தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. வளர்ச்சிக்கான இழக்கப்பட்ட அளவீடுகளை திரும்ப பெ றவு ம் மற்றும் இயல்பு வாழ்க்கையை குழந்தை வாழ்வதும் முக்கியமானது. அத்துடன், மாற் று ப் பதியம் செய்யப்பட்ட எலும்பு மஜ்ஜை சிகிச்சை வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் இக்குழந்தைக்கு மற்றுமொரு முக்கியமான அம்சமாக இருந்தது. 1 ஆண்டுக்கும் அதிக மா க ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த நாங்கள், இக்குழந்தை மீது தொ டர் கண்காணிப்பை வைத்திருந்தோம். இயன்முறை சிகிச்சை, ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் ஆன்ட்டிவைரல் நோய்த்தடுப்பு முறை, மூச்சுப் பெருங்குழாய்த் திறப்பு சிகிச்சை மற்றும் தொடர்புக்குழாய் அகற்றலுக்குப் பிந்தைய பராமரிப்பு ஆகியவை உட்பட மறுவா ழ்வி ற் கான சிகிச்சை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய குறிப்பிட்ட காலஅளவுகளில் மரு த்து வமனைக்கு குழந்தை கொண்டு வரப்படுவதை மருத்துவர் குழு உறுதி செய்தது,” என்று கூ றினார்.
அவர் மேலும் பேசுகையில், “புது தொற்றுகள் வராமல் தடுக்கின்ற அதே வேளையில், இழ ந்த வளர்ச்சிக்கான அளவுகோல்களை மீண்டும் பெறவும், மறுவாழ்விற்கு அவசியமான அனைத்து போதுமான வாய்ப்புகளும் குழந்தைக்கு தரப்படுவதையும் நாங்கள் உறுதி செ ய்தோம். தற்போது, லோச்சன் என்ற இந்த குழந்தையால் பிறர் ஆதரவில்லாமல் எழுந்து நிற்கவும், பெற்றோர்களை அடையாளம் காணவும், ஒலிகளை உச்சரிக்கவும் மற்றும் பிற நபர்களோடு கலந்து இடைவினையாற்றவும் முடியும். அவனது இடது கையில் இருக்கும் லேசான பலவீனத்திற்கு தரப்படும் இயன்முறை சிகிச்சையின் மூலம் அதுவும் முன் னே ற்றம் கண்டு வருகிறது.” என்று கூறினார்.
ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் யூனிட் ஹெட் திரு. சரவணகுமார் ராஜன் மகிழ்ச்சியோடு இதுபற்றி கூறியதாவது: “இந்த மருத்துவ நேர்வு பல அம்சங்களில் முதன் முறை நிகழ்வாக இருக்கிறது. ELSO பதிவகத்தின்படி உலகில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகி ச்சை மேற்கொள்ளப்பட்ட 8 குழந்தைகளுக்கு மட்டுமே (அனைவரும் யுஎஸ்ஏ மற்றும் யு கே வை சேர்ந்தவர்கள்) எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. எலும்பு மஜ்ஜை மாற்று சி கிச்சைக்குப் பிறகு எக்மோவில் வைக்கப்பட்ட எந்த குழந்தையும் உயிர் பிழைத்ததில்லை. ஆனால், இக்குழந்தைக்கு தீவிர தொற்று மற்றும் நச்சேற்ற குருதியின் காரணமாக பல உறு ப்புகளின் செயலிழப்பு பிரச்சனை இருந்தது. லோச்சன் என்ற இக்குழந்தைக்கு வெ ற்றிகரமான சிகிச்சையளித்து, வரலாற்று பதிவில் இடம்பெறுமாறு ரெயின்போ மருத் துவமனை இச்சாதனையை செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.”
முதலமைச்சரின் நிதியுதவியின் கீழ் லோச்சனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய் யப்பட்டது. ஆனால், இதற்குப் பிந்தைய செலவுகளை எதிர்கொள்ள இக்குழந்தையின் குடு ம்பத்தினருக்கு வசதியில்லை. எக்மோ, டயாலிசிஸ் அறுவைசிகிச்சை செயல் முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாத கால PICU தங்கியிருப்பிற்கான செலவீனத்திற்கு ரூபாய். 40 இலட்சம் என்ற தொகை இக்குழந்தை உயிர்பிழைப்பிற்காக தேவைப்பட்டது. பெ ற்றோர்களால் வழங்கப்பட்ட தொகையின் எஞ்சிய தொகையைக் கொண்டு எக்மோ செயல்பாடு தொடங்கப்பட்டது. எனினும், குடும்பத்தால் திரட்டப்பட்ட திறன்மிக்க கிரவு ட்ஃபண்டிங் செயல்திட்டத்தினாலும் மற்றும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவம னை யின் தாராள மனப்பான்மையாலும் இந்த பராமரிப்பு சிகிச்சை தொடர்ந்து மேற்கொ ள்ள ப்பட்டது. இக்குழந்தையின் உயிரைக் காப்பதற்காக பல நபர்கள் நிதியுதவி செய்தனர். பல்வேறு செயல்தளங்களில், இக்குழந்தையின் சிகிச்சை முன்னேற்றம் பற்றிய தகவ ல்கள் நிகழ்நிலைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு அதிக அன்பளிப்புகள் வரத்தொடங்கின. எங் களுக்குத் தெரிந்தவரை உயிர்பிழைப்பிற்கு < 1% வெற்றி வாய்ப்பையே கொண்டி ரு ந்த ஒரு குழந்தைக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு பொதுமக்களின் நிதியுதவி திட்டம் வெற்றிகரமாக உதவியிருப்பது இதுவே முதன்முறை; உயிர் பிழைப்பதற்கான அதிக வா ய்ப்புள்ள குழந்தைகளோடு ஒப்பிடுகையில், இத்தகைய குழந்தைகளுக்கு நிதியுதவி பொ துவாக கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை குறித்து:
ரெயின்போ ஹாஸ்பிட்டல்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெ டிகேர் பிரைவேட் லிமிடெட், குழந்தைகள் பராமரிப்பு, மகளிருக்கான சிகிச்சை மற் றும் கருஉருவாக்கம் ஆகியவற்றில் 21 ஆண்டுகள் சிறப்பான செயல்திறன் வரலாற்றை கொண்டிருக்கிறது. குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று, 1999 ஆம் ஆண்டில் நிறு வப்பட்ட இது, இந்தியாவின் முதல் கார்ப்பரேட் குழந்தைகள் மருத்துவமனையாகும். பச்சி ளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் உயர் தரஅள வு கோ லை நிறுவியிருக்கும் ரெயின்போ, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஆயிரக் க ண க்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. நாட்டின் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றாக உருவாகி யிரு க்கிறது. பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைகளுக்கும், பச்சிளம் குழந்தைகளு க்கு ம் மற்றும் குழந்தைகளுக்கும் உயர்தர சிகிச்சை பராமரிப்பை வழங்குவதே ரெயின்போ மருத்துவமனையின் நோக்கமாகும். மூன்றாம் நிலை சிகிச்சை வசதி கிடைக்காத நிலை எவருக்கும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படும் இம்மருத்து வம னை யின் மருத்துவக்குழுவில், உயர் தகுதியும், அனுபவமும் உள்ள மருத்துவ நிபு ணர் கள், உள்ளுறை மருத்துவர்கள், நன்கு பயிற்சி பெற்ற செவிலியர்கள், துணை மருத்துவ ப ணி யாளர்கள் ஆகியோரோடு அதிக ஊக்கத்தோடு செயல்படும் முழுநேர மற்றும் பகு தி நே ர பணியாளர்களின் குழுக்கள் அங்கம் வகிக்கின்றனர். எமது வெற்றிக்கான அளவீ டா க இருப்பது சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கின்ற புன்னகை தளும்பும் முக ங்க ளின் எண்ணிக்கையே. மிகச்சிறப்பான உடல்நலத்தின் மூலம் வாழ்க்கையை முழு மை யா க்குவதே எமது கனவாகவும், செயல் குறிக்கோளாகவும் இருக்கிறது. பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கான ஒரு மருத்துவமனையாக, சிகிச்சைக்காக வரும் நோயா ளி க ளை மு ழு மையான உடல்நலத்தோடு வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு தன்னையே அர்ப்ப ணித் துக் கொண்டிருக்கிறது.