அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவா ன இணையதளம்
அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவா ன இணையதளம்
அமைச்சர் மா. சுப்ரமணியம் துவக்கி வைத்த இணையதள விழாவில் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்ட நடிகர் காளி வெங்கட்.
பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை கட்டணமின்றி ஆன்லைன்மூலமாக விற்பனை செய்யும் வகையில் உருவான புதிய இ ணை யதளத்தை தமிழ்நாடு அரசின் *மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அ மைச்சர் மா. சுப்பிரமணியம்* இன்று அவரது இல்லத்தில் திறந்து வைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பலதரப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக சுய உதவி குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வகையில் பாதிக் கப்ப ட்ட மக்களால் செய்யக்கூடிய கலை வண்ண பொருட்கள் மற்றும் குடிசை தொழில் மூல மாக உருவான சிறு தொழில் சம்பந்தப்பட்ட பானைகள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட இ தர விற்பனை பொருட்களை கொரனா தொற்றால் வெளியில் வந்து விற்பனை செய்ய முடியாத இந்த சூழலில் Take care international foundation தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் Dr முகமது இப்ரஹிம்சிறு தொழில் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கலால் உருவாக்க ப் பட்ட பொருட்களை விற்பதற்கு ஏதுவாக www.takecareinternational.org என்ற இணைய தளத் தை உருவாக்கி உள்ளார்.
இது கொரனாவால் பாதிக்கப்பட்டு தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் சிறு தொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்தி பொ ருட்களை விற்க, அவர்களே இந்த இணையத்தில் இணைந்து தங்கள் பொருட்களின் புகை ப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு அவர்களே விலையும் நிர்ணயம் செய்துகொள்ள லா ம். இந்த இணைய தளத்தை இன்று காலை 9 மணிக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமை ச்சர் மா. சுப்ரமணியன் அவரது இல்லத்தில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு வி ருந்தினர்களாக நடிகர் காளி வெங்கட் மற்றும் சுத்தா தொண்டு நிறுவனர் நிஷா தோட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.